கே.பாக்யராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
1 hour before

கே.பாக்யராஜ் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சென்னை, ஜூன் 27 - இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இதுதொடர் பாக விடுத்துள்ள இரங்கல் அறிக்கை வரு மாறு:

தமிழ்த் திரையுலகில் தலைசிறந்த கதையாசிரியர், இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறன் படைத்த கே.பாக்யராஜ் அவர்கள் சனிக்கிழமை யன்று மறைவுற்றார் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தரு கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மக்களின் இதயத்தில் இடம்பிடித்த படைப்பாளி

இயக்குநர் பாக்யராஜ் மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களிடம் துணை இயக்குநராக பணி யாற்றி, தனது நடிப்பாலும் உழைப்பா லும் படிப்படியாக உயர்ந்து தமிழ்த்திரை யுலகில் தனக்கென தனி முத்திரைப் பதித்தவர். கிராமிய வாழ்க்கையை மைய மாக கொண்ட கதையினாலும், இயல் பான நகைச்சுவையினாலும், குடும்பப் பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.

முற்போக்குக் கருத்துக்களை திரையில் கொண்டு சென்றவர்

ஞானப்பழம், இது நம்ம ஆளு படங்களில் தனது நடிப்பின் மூலம் முற்போக்கு கருத்துக்களையும், விழு மியங்களையும் எளிய முறையில் மக்க ளுக்கு கொண்டு சென்றவர். தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கி யதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது இணையர் திருமதி பூர்ணிமா பாக்யராஜ் அவர்களுக்கும், மகள் சரண்யா, மகன் சாந்தனு மற்றும் உறவி னர்களுக்கும், திரையுலக நண்பர்களுக் கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரி வித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.