தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவோம்

16 Jun 2026, 9:35 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக  மக்களைத் திரட்டிப் போராடுவோம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுவோம்

கே. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

சிதம்பரம், ஜூன் 16- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்க ளைத் திரட்டிப் போராடு வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் கூறினார்.

கடலூரில் செய்தி யாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க ஒன்றிய அரசும், சில தரப்பினரும் நீதிமன்றம் வாயிலாக முயற்சி செய்கின்றனர்.

இதை தமிழக அரசும் மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பிறகும், தற்போது கடலில் இருந்து 18 கி.மீ தொலைவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கத் திட்டமிடுகின்றனர்.

இது சுற்றுச்சூழலையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கடு மையாகப் பாதிக்கும். ஒன்றிய அரசு இத்திட்டத்தை மறைமுகமாகச் செயல் படுத்த முயன்றால், மக்க ளைத் திரட்டிப் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். மேலும், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைச் சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த கால ஆட்சியில் மின்மாற்றி கள் கொள்முதல் செய்த தில் ரூ.400 கோடி முறை கேடு நடைபெற்றதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தும், ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

மின் துறை அலுவலகத்தில் கணினி ஹார்ட்டிஸ்க்குகள் காணாமல் போனது வர லாற்றில் இல்லாத ஒன்று; இதில் திட்டமிட்ட சதி உள்ளது. தொடர்புடைய வர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கவேண்டும்.

கர்நாடக அரசின் மேகதாது அணைத்திட்டம் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது. அதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது. அனுமதி வழங்கப்பட்டால் தமிழகம் பாலைவனமாக மாறும். முதலமைச்சரும் இதே கோரிக்கையை ஒன்றிய அரசிடம் முன்வைத்துள்ளார் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.