உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் தமிழ்நாட்டு மருத்துவர்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்!
5 Jun 2026, 9:13 pm

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகள் தமிழ்நாட்டு மருத்துவர்களின் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்!

கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 5 - உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில், தமிழ் நாட்டிற்கான இடங்களை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாட்டில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி (NEET Super Speciality) படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் சேவை ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் 50 சத விகித இடங்களை அரசு மருத்துவர்களுக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இந்த இடங் களில் சேரும் அரசு மருத்துவர்கள், ஓய்வுபெ றும் காலம் வரை, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஒப்புக்கொள்கின்றனர். இதன் மூலம் மாநிலத்தின் பொது சுகா தாரக் கட்டமைப்பு வலுப்பெறுவதுடன், அரசு மருத்துவமனைகளில் சூப்பர் ஸ்பெஷா லிட்டி சிகிச்சை தொடர்ந்து கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது. இந்த கல்வியாண்டில் இவ் வாறான சேவை ஒதுக்கீட்டு இடங்களில் 152 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, நீட் கட்-ஆப் மதிப்பெண்களை (NEET SS cut-off percentile) குறைத்து சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கலந் தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக் கும்போதே இந்த இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது, தமிழ்நாட்டு நலனுக்கும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் நோக்கத்திற்கும் முரணானதாக உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு, அரசு சேவை மருத்துவர்களுக் கான 50 சதவிகித சேவை ஒதுக்கீட்டைப் பாது காக்க வேண்டும். நமது மாணவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தமிழ்நாட்டு மருத்துவர்களால் நிரப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டு உள்ளார்.