நீட் தேர்வின் பின்னணியில் உள்ள லாபநோக்கை முறியடிப்போம்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு!
19 Jul 2026, 9:48 pm

நீட் தேர்வின் பின்னணியில் உள்ள லாபநோக்கை முறியடிப்போம்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு!

சென்னை, ஜூலை 19- நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட னடியாகப் பதவி விலக வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானம் அருகே கண்ட னப் போராட்டம் சனிக்கிழமை (ஜூலை 18) நடைபெற்றது.

நீட் தகுதிக்கு எதிரானது

இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், நீட் தேர்வு மாணவர்களின் தரத்தை உயர்த்துவதாகக் கூறுவது பொய் என்றும், இது கோச்சிங் சென்டர்களின் லாபத்திற்காகவே செயல்படுகிறது என்றும் கடுமையாகச் சாடினார். நீட் தேர்வு அறிமுகமாவதற்கு முன்பே, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போன்ற நிறு வனங்களில் பயின்றவர்கள் உலகத்த ரம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், நீட் தேர்வுக்கும் மருத்துவத் தகுதிக்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் கைது ஜனநாயக விரோதச் செயல் என்று கண்டித்த அவர், விவசாயிகள் போராட்டத்தின் போது மோடி அரசு மண்டியிட்டது போல, நீட் தேர்வு ரத்து மற்றும் கல்விச் சீர்திருத்தங்களுக்காக நடை பெறும் இந்தப் போராட்டமும் மத்திய அரசுக்கு எதிரான மிகப்பெரிய இயக்க மாக மாறும் என்று எச்சரித்தார்.

மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மருத்துவர் அமலோற்பநாதன், எழுத்தாளர் கொற்றவை, எஸ்.எஃப்.ஐ மாநிலத் தலைவர் சி.மிரு துளா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். நிகழ்வில் கட்சியின் செயற் குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், கே.முரு கன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே. ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.