தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் இறுதிக் கட்டத் தீவிரப் பிரச்சாரம்

8 Apr 2026, 5:30 am
புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் இறுதிக் கட்டத் தீவிரப் பிரச்சாரம்

புதுச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் இறுதிக் கட்டத் தீவிரப் பிரச்சாரம்

புதுச்சேரி, ஏப்.7- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9 அன்று நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

லாஸ்பேட்டை மற்றும் உப்பளம் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் ராஜாங்கம் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு ஆதரவாக, 'சக்தியால் அரிவாள் நட்சத்திரம்' சின்னத்திற்கு வாக்குகள் கோரி, திறந்த வாகனத்தில் கே. பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருபுவனை தொகுதி: திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட செல்லிப்பட்டுப் பகுதியில் வாக்கு சேகரிப்புக்கு, கட்சியின் மாநிலக்குழு கமிட்டி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். வேட்பாளர் தட்சிணாமூர்த்தியுடன் திறந்த வாகனத்தில் சென்ற கே.பாலகிருஷ்ணன், தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

வம்புப்பட்டு, சோரப்பட்டு, வாதானூர், பி.எஸ். பாளையம், சன்னியாசிகுப்பம், கலித்தீர்த்தாள்குப்பம், திருவாண்டார்கோவில் வழியாகச் சென்ற பிரச்சாரம் இறுதியாக மதகடிப்பட்டில் நிறைவடைந்தது. ஏராளமான கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் செங்கொடி ஏந்தி இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.

லாஸ்பேட்டை தொகுதி: லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெத்துசெட்டிப்பேட்டையில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு, உழவர்கரை நகரக்கமிட்டி செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினார். வேட்பாளர் ராஜாங்கத்துடன் திறந்த வாகனத்தில் சென்ற கே.பாலகிருஷ்ணன், ஜவஹர்சோலை, நெசவாளர் நகர், செல்லப்பெருமாள்பேட், சாந்தி நகர், அசோக் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

முன்னதாக வேட்பாளர் ராஜாங்கம் காந்திசிலை சென்று வணங்கிச் சேகரித்து தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.