சொந்தத் தொகுதியையே வளர்க்காத ரங்கசாமி மாநிலத்தை எப்படி வளர்ப்பார்? புதுச்சேரி பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி
26 Sept 2026, 9:49 pm

சொந்தத் தொகுதியையே வளர்க்காத ரங்கசாமி மாநிலத்தை எப்படி வளர்ப்பார்? புதுச்சேரி பிரச்சாரத்தில் கே.பாலகிருஷ்ணன் கேள்வி

புதுச்சேரி,செப்.26-தனது தொகுதியின் வளர்ச்சியை ஏற்படுத்தாத முதல்வர் ரங்கசாமி எப்படி மாநில வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில்போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீமை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட வேலன் நகரில் வேட்பாளர் அ.மு.சலீம் உடன்வீதி வீதி யாக சென்று மக்களைசந்தித்து கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர் களை சந்தித்து கூறிய தாவது:- தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் இடைத் தேர்தலில் சிபிஐ, சிபிஎம், சிபிஐஎம்எல் எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்துதனியாக போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.அதனடிப்படையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டி யிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளர் சலீமை ஆதரித்து பிரசாரத்தில் ஈடு பட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஸ்டார் தொகுதி என பெயர்பெற்ற இந்த தொகுதியில் முதல்வராக ரங்கசாமி இருந்தாரே தவிர, மக்களுக்கான அடிப்படை தேவைகளான சாலை, சுகாதாரமான குடிநீர், கழிப்பிட வசதிகளை கூட முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.

விலைவாசி உயர்ந்துள்ளது. மாநில அரசு கடனில்தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் அதிக நிதியை பெறுவோம் என்றார்களே தவிர, எந்த நிதியையும் அவர்களால் பெறமுடியவில்லை. ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து குரல்கொடுக்கும் தைரியம் கூடஇல்லாதவராக ரங்கசாமியின் ஆட்சி நடை பெறுகிறது.இந்தியாவையே உலுக்கிய போலி மருந்துகுற்றச்சாட்டுகள் இன்றைக்கும் மக்களை அச்சுறுத்திக் கொண்டி ருக்கிறது. அப்படிப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கும்அரசாக ரங்கசாமி அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. தனது தொகுதியின் வளர்ச்சியை கூட ஏற்படுத்தமுடியாத முதல்வர் ரங்கசாமி எப்படி மாநிலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

இப்படிப்பட்ட சூழலில் சிபிஐ வேட்பாளர் சலீம்வெற்றி பெறும்போது, சட்டப்பேரவையில் மக்களின் உரிமைகளுக் காக குரல் கொடுப்ப தோடு, ரேஷன் கடைகளை திறப்பது, வேலை வாய்ப்பு களை பெறுவது, மக்களின்அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு குரல் கொடுப்பார்.

மாஹே தொகுதியில் சிபிஎம் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள அசோக்குமார் எம்எல்ஏவுடன் அ.மு.சலீம்

இணைந்து சட்டப் பேரவையில் குரல் எழுப்புவார். இந்த தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி நடந்தாலும், ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி என்றால்அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளுக்கு தெரியாமல் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசாரணை கமிஷன் தலை வரான அருணா ஜெகதீசன் குழு கூறியது.ஆனால், இதே அரசுதான் நீதிமன்றம் சென்று, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லைஎன்று வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு வந்தது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது என்று சொன்னால், எல்லா ஆட்சிக்கும் அடி வயிறுகலங்குகிறது.

ஏனென்றால், அதிகாரிகள்மீது நடவடிக்கைஎடுத்தால், தங்கள் கதி என்ன ஆகுமோ என ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள். எனவே ஜெம் வீரமணி வழக்கில் சிறுதவறு நடந்தாலும், மக்களைத் திரட்டி இடதுசாரிகள் சார்பில் போராட்டங்களை நடத்துவோம், என்றார்.

இப்பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர்ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், சீனு வாசன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா மற்றும்மாநில குழு உறுப்பினர்கள் ராம்ஜி, ஜோதிபாசு, சஞ்சய்சேகரன், கமிட்டி உறுப்பினர்கள் அரி கிருஷ்ணன், முனியம்மாள், சுரேஷ், மற்றும் சிபிஐ மாநில நிர்வாகிகள் நாரா.கலைதான்,கீதநாதன், தினேஷ்பொன்னையா, சுப்பையா, அந்தோணி, எழிலன்,செல்வம் உட்பட திரளான இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.