அண்ணாமலை மாறுவேடம் எடுபடாது! கே.பாலகிருஷ்ணன் பேட்டி
5 Jun 2026, 9:15 pm

அண்ணாமலை மாறுவேடம் எடுபடாது!

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

விழுப்புரம், ஜூன் 5 - “பாஜகவின் முகத்தை மாற்றி, அண்ணாமலை தலைமையில் புதிய கட்சியைத் தொடங்க முயல் கின்றனர். இந்துத்துவ, சனாதனக் கோட்பாட்டைக் கொண்ட ஒரு கட்சி தமிழ்நாட்டில் எப்போதும் வெற்றி பெற முடியாது. மீண்டும் ஒருமுறை அண்ணாமலை தோல்வி அடைவது உறுதி” என்று விழுப்புரத்தில் செய்தியா ளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதா வது:

மாறுவேடத்தில் புதிய கட்சி

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகச் செயல்பட்ட அண்ணா மலை புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் பாஜக விற்கு உயிர் ஊட்ட எவ்வளவோ முயற்சி கள் செய்தும் அது நடக்கவில்லை. இத னால், மாறுவேடம் போட்டு மற்றொரு கட்சியை ஆரம்பித்தால், அதன் மூலமா வது தமிழகத்தில் காலூன்ற முடியுமா என முயற்சி செய்கிறார்கள். இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டினை அடிப்படை யாகக் கொண்டு, மத்தியில் இருக்கும் பாஜகவின் முகத்தை மாற்றி வேறொரு பெயரில் கட்சி ஆரம்பிப்பதால் தமிழ்நாட் டில் பெரிய செல்வாக்கைப் பெற முடி யாது. மீண்டும் ஒருமுறை அண்ணா மலை தோல்வி அடையப்போவது உறுதி.

மேகதாது அணை விவகாரம்

கர்நாடக முதலமைச்சர், டி.கே.சிவக் குமார், மேகதாதுவில் அணையைக் கட்டியே தீருவேன் எனச் சபதம் ஏற்கும் வகையில் பேசி வருகிறார். மேகதாதுவில் அணை கட்டுவது என்பது ஒரு மாநிலத் தின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. காவிரி ஆறு என்பது பல மாநிலங்களுக் குச் சொந்தமானது. ஆற்றின் மேல் பகுதியில் அணை கட்டுவது குறித்துக் கர்நாடக அரசு மட்டுமே தனித்து முடி வெடுக்க முடியாது; இது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று கர்நாடக மக்கள் விரும்பவில்லை. தனது அரசியல் ஆதாயத்திற்காகவும், காங்கிரஸ் கட்சியில் தனது ஆதிக்கத்தை யும் செல்வாக்கையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே டி.கே.சிவக் குமார் இப்பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார். அதே அரசியல் ஆதா யத்தைப் பெறவே ஒன்றிய அரசும் இதற்குச் சாதகமாகச் செயல்படுகிறது. மேகதாதுவில் அணை கட்டும் இத்த கைய முயற்சிகளைத் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், பொது மக்களும் இணைந்து முறியடிக்க வேண்டும்.

தமிழக அரசுக்கான கோரிக்கைகள்

தமிழக வெற்றிக் கழக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றும் வகையில் திட்டமிட வேண் டும். முதற்கட்டமாகப் பெண்களுக்கான உதவித்தொகை, ஒப்பந்தப் பணியாளர் களைப் பணி நிரந்தரம் செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் விவசாயிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்த தொழிலாளர் களுக்கு எதிரான நான்கு சட்டங்களுக்கு எதிராகக் கேரளா அரசு ‘கோபால் கமிஷன்’ அமைத்தது போல இங்கும் செயல்பட வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரி வித்தார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், சிஐடியு மூத்த உறுப்பினர் உதயகுமார், மாவட்டக் குழு உறுப்பினர் கார்க்கி உட்படப் பலர் உடனிருந்தனர்.