வர்க்கப் போராட்ட வரலாற்றையும் தியாகிகளையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்
3 Oct 2026, 8:59 pm

வர்க்கப் போராட்ட வரலாற்றையும் தியாகிகளையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மேடையில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த தலைவர் கோ.பழனிச்சாமி, மாரிமுத்து எம்.எல்.ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் உள்ளனர்.

திருவாரூர், அக். 2 –திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மக்கள் தலைவர் பி. சீனிவாசராவ் (பி.எஸ்.ஆர்) நினைவு நாளையொட்டி செப்டம்பர் 30 அன்று மாலை நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.செங்கொடி இயக்கத்தின் வரலாற்றுச் சாதனைகள்அப்போது அவர் பேசுகையில், “கர்நாடகத்தில் பிறந்து, தமிழ்மொழி அறியாதபோதும் அடித்தட்டுமக்களின் கண்ணீரை உணர்ந்து, தென்பரையில் பண்ணையார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் தோழர் பி. சீனிவாசராவ். பண்ணையார்களின் கொடூரத் தாக்குதல்களையும், காவல்துறையின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு செங்கொடி இயக்கம் ஆற்றிய போராட்டங்கள்தான் தமிழகத்தின் கிராமப்புற விடுதலையைச் சாத்தியமாக்கின. காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும்பல்வேறு ஆட்சிக் காலங்களிலும் நிலப்பிரபுக்களும் பண்ணையார்களுமே பாதுகாக்கப்பட்டனர். கீழவெண்மணி படுகொலை தொடங்கி களப்பால்குப்பு, ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் என எண்ணற்றதோழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும், செங்கொடி இயக்கம் ஒருபோதும் பின்வாங்கவில்லை. பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களை ஒரேபோர்ப்படையாகத் திரட்டி, தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டிய பெருமை கம்யூனிஸ்ட் இயக்கத்தையே சாரும்” என்றார்.

தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாடு

தொடர்ந்து பேசிய அவர், “மாறி மாறி ஆட்சிக்குவந்த காங்கிரஸ், அதிமுக, திமுக அரசுகள் மற்றும்தற்போதைய அரசும் கூட மின்சாரம், பாதாளச்சாக்கடை, குடிநீர் விநியோகம் போன்ற பொதுத்துறை சேவைகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நவதாராளமயக் கொள்கைகளையே தொடர்கின்றன. சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்குவழங்குவதற்கான பரிந்துரைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான கடன் தள்ளுபடி போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்த்துவருகின்றனர்” என்றார்.

பாஜகவின் மக்கள் விரோதப் போக்கு

மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் மதவெறி அரசியலைத் திணிப்பதோடு, தேர்தல் ஆணையத்தைக் கைப்பற்றி வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிராகத்தமிழ்நாட்டிலும் நாடு முழுவதிலும் இடதுசாரி கட்சிகள் சமரசமின்றிப் போராடி வருகின்றன.

இடதுசாரிப் பாதையே மாற்றுப் பாதை

தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகளின் ஆட்சிமுறைகளுக்கு மாற்றாக, பாட்டாளி மக்களுக்கானஉண்மையான சமூக நீதியையும் சமத்துவத்தையும் வழங்கக்கூடிய ஒரே வழி இடதுசாரிப் பாதை மட்டுமே. எனவே,இந்தச் செங்கொடி இயக்கத்தின் வரலாறு மற்றும் தியாகப் பரம்பரையை இன்றைய இளையதலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலனுக்கான மாற்று அரசியலை முன்னெடுப்போம்” என அவர் சூளுரைத்துப் பேசினார்.சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கே.பாலகிருஷ்ணன் பேச்சுபொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசினார். மேடையில் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்,மூத்த தலைவர் கோ.பழனிச்சாமி, மாரிமுத்து எம்.எல்.ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன்உள்ளிட்டோர் உள்ளனர்.