அந்தமானில் ஜனநாயகத்தை மறுக்கும் மோடி அரசு போர்ட் பிளேர் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
23 Jun 2026, 10:03 pm

அந்தமானில் ஜனநாயகத்தை மறுக்கும் மோடி அரசு போர்ட் பிளேர் கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!

போர்ட் பிளேர், ஜூன் 23- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்க ப்பட்ட ஒரு அரசாங்கத்தையோ அல்லது சட்டமன்றத்தையோ அமைக்க ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து தவறி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் கடுமையாகக் குற்றம்சாட்டி யுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தமான் நிக்கோ பார் தீவுகளின் போர்ட் பிளேர் நகரக் குழு மற்றும் தெற்கு அந்தமான் புறநகர் குழு வைச் சேர்ந்த கட்சி உறுப்பி னர்களின் மாபெரும் பேரவைக் கூட்டம், போர்ட் பிளேரில் உள்ள ‘ஷாஹீத் பவன்’ வளாகத்தில் நடை பெற்றது.

சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.சந்திரசூடன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அந்தமான் தீவுகள் புறக்கணிப்பும் பாஜகவின் சுயநலமும் இக்கூட்டத்தில் அந்த மான் நிக்கோபார் தீவுகளின் நிலவரம் குறித்து கே.பால கிருஷ்ணன் பேசுகையில், “இங்குள்ள மக்கள் தங்க ளின் ஜனநாயக உரிமை களுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால், இந்தத் தீவுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சட்டமன்றத்தையோ அல்லது அரசாங்கத்தையோ அமைக்க மோடி அரசு முட்டுக்கட்டை போட்டு வரு கிறது. இந்தத் தீவுகளைத் தங்களின் நேரடி அதிகாரத் தட்டின்கீழ், அதிகாரத்துவக் கட்டுப்பாட்டிலேயே வைத்தி ருக்கவே பாஜக விரும்புகிறது” என அவர் சாடினார்.

தொடர்ந்து பேசிய சிபிஎம் அந்தமான் மாநிலச் செயலாளர் டி.அய்யப்பன், அந்தமான் நிக்கோபார் தீவு களின் உள்ளூர் பிரச்சனை களைப் புறக்கணித்து வரும் மோடி அரசுக்கு எதிராக, தீவு மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவி வருவதை விவரித்தார்.

உள்நாட்டில் தனிமைப்படும் மோடி அரசு சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரே லின் உழைப்பாளர் விரோதப் போக்கினை ஆதரிப்ப தால் இந்தியா எப்படி உலக அரங்கில் ஓரங்கட்டப்படு கிறதோ, அதேபோல அதானி, அம்பானி போன்ற கார்ப்ப ரேட்டுகளை ஆதரிப்பதால் மோடி அரசு உள்நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வரு கிறது என்று தனது உரையின் போது கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும், உலகப் போர்ப் பதற்றங்களைக் காரணம் காட்டி சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மோடி அரசு உயர்த்தியுள்ளதால் நாட்டின் ஒவ்வொரு நடுத்தரக் குடும்ப மும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது என்றார்.

அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொட ரில் மாநிலங்களின் உரிமை களைப் பறிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா வை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டு, பிற கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் எச்ச ரித்தார்.

அமெரிக்காவின் அடாவ டித்தனங்களை எதிர்த்து கடந்த 60 ஆண்டுகளாகப் போராடி வரும் சோஷலிச கியூபாவின் தீரமிக்க போராட்ட ங்களையும், பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் முற்றுகையையும் இக்கூட்டத் தில் தலைவர்கள் சுட்டிக்காட்டி னர்.

இக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் டி.லட்சுமண் ராவ், கௌரங்க மாஜி, புரோஜித் குமார் சர்க்கார், பி.சத்யபால் உள்ளிட்ட திரளான தோழர் கள் பங்கேற்றனர்.