தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு

31 May 2026, 9:35 pm
தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது  நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு

தோழர் கே.பாலதண்டாயுதம் 53 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு டி.கே. ரங்கராஜன் பங்கேற்பு

சென்னை, மே 31 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலை வர், தியாகச் செம்மல் தோழர் கே.பாலதண்டா யுதம் அவர்களின் 53 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட வீரர், நெல்லை சதி வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு சிறைகளில் வாழ்ந்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் நீண்ட காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்திய தோழர் பால தண்டாயுதம் நினைவேந்தல் நிகழ்வு சென்னை தியாக ராயா நகரில் உள்ள ‘பாலன் இல்லத்தில்’ நடைபெற்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் மு.வீரபாண்டியன் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலை வரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழருமான முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கே. பாலதண்டாயுதம் உருவப் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார்.

உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் நிதிக் குழு செயலாளரும் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஏராளமானோர் தோழர் கே. பாலதண்டாயுதம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.