பொய்வழக்கிலிருந்து கே.பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க, சிபிஎம் தலைவர்கள் விடுதலை
8 Jul 2026, 8:59 pm

பொய்வழக்கிலிருந்து கே.பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்க, சிபிஎம் தலைவர்கள் விடுதலை

திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு! திண்டுக்கல், ஜூலை 8 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் சிபிஎம் தலைவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய்வழக்கிலிருந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்களைத் திண்டுக்கல் நீதிமன்றம் புதனன்று முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது. பாலியல் குற்றவாளிக்கு ஆதரவும், காவல்துறை தொடுத்த பொய்வழக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திண்டுக்கல் லில் உள்ள ஒரு தனியார் கல்லூரித் தாளா ளர் பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வலியுறுத்தி, அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் ஆவேசமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வழக்கறிஞர் தெய்வேந்திரன் என்பவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வேண்டுமென்றே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, கே.பாலபாரதி உள்ளிட்ட மாதர் சங்கத் தலைவர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசினார். ஆனால், அவரே தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மாதர் சங்க மற்றும் சிபிஎம் தலைவர்கள் மீது ஒரு பொய் புகாரை அளித்தார். தன் மீது அவ தூறு பரப்பித் தாக்கியதாகக் கூறப்பட்ட அந்தப் பொய் புகாரை அப்படியே ஏற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள், மாதர் சங்கத் தலைவர்களான கே.பால பாரதி, எம்.ஜானகி, ஜி.ராணி, ஆர்.வனஜா, ஆண்டாள் அம்மாள், சிபிஎம் தலைவர்கள் ஏ.அரபுமுகமது, ஜோதிபாசு மற்றும் 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத் தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தலைவர்கள் தரப்பில் வழக்கறி ஞர்கள் கென்னடி, ராகேஷ், விமலா, சோனியா, வசந்த பூர்ணிமா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இந்த நெடிய சட்டப் போராட்டக் காலத்திலேயே இவ்வழக்கின் 5-வது மனுதாரரான தோழர் ஆண்டாள் அம்மாள் இயற்கை எய்தினார். வழக்கை இறுதி விசாரணை செய்த நீதிபதி, புதனன்று தனது தீர்ப்பை வழங்கி னார். குற்றம் சாட்டப்பட்ட தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதையும் அரசு தரப்பு சாட்சிகளோ, சான்றாவணங்களோ சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவ றிவிட்டன என்று நீதிபதி சுட்டிக்காட்டி னார். எனவே, இந்திய தண்டனைச் சட்டத் தின்படி இவர்கள் யாரும் குற்றவாளிகள் இல்லை எனத் தீர்மானித்து, கே.பாலபா ரதி உள்ளிட்ட மாதர் சங்கத் தலைவர்கள் 4 பேரையும், சிபிஎம் தலைவர்கள் 2 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். (ந.நி.)