கே.பாலபாரதி பிரச்சாரம்
28 Sept 2026, 1:06 am

கே.பாலபாரதி பிரச்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சியின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்திக்கு ஆதரவாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலபாரதி மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் . ஜனநாயக மாதர் சங்கத்தில் மாநில துணைத்தலைவர் சித்ரகலா, மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ். மிருதுளா, வாலிபர் சங்கத்தின் மாநில பொருளாளர் டி.சந்துரு மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகி எஸ்.குமார், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.குணசேகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.