தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிப்பீர்! தாராபுரத்தில் கே. பாலபாரதி பிரச்சாரம்

25 Sept 2026, 11:39 pm
உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிப்பீர்! தாராபுரத்தில் கே. பாலபாரதி பிரச்சாரம்

உழைக்கும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இடதுசாரிகளுக்கு ஆதரவு அளிப்பீர்!

தாராபுரத்தில் கே. பாலபாரதி பிரச்சாரம்

திருப்பூர், செப். 25 -தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளராகப் போட்டி

யிடும் ப. லட்சுமணனை ஆதரித்து, கரூர் சாலை மீனாட்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி வெள்ளியன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

“மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்”

தாராபுரத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் இயல்பான சூழலில் வந்தது அல்ல எனவும், மக்கள் நம்பி வாக்களித்து வெற்றிபெறச் செய்தஅதிமுக எம்எல்ஏ, 20 நாட்களில் பதவி ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்ததால் இந்தத் தேர்தல் மக்கள் மீதுதிணிக்கப்பட்டதாக அமைந்துள்ளது எனவும் பாலபாரதி தெரிவித்தார். பதவி விலகிக் கட்சி மாறியவரையே மீண்டும் வேட்பாளராகநிறுத்தியிருப்பது, வாக்களித்த வாக்காளர்களை மதிக்காத நடைமுறை எனவும், இது மக்களின் வரிப்கணத்தை வீணாக்கும் நியாயமற்ற அரசியல் எனவும் அவர்விமர்சித்தார். இதுபோன்ற கட்சித் தாவல் அரசியலை ஆரம்பத்திலிருந்தே மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் கடுமையாக எதிர்த்து வருவதாகவும்,இது ஜனநாயக விரோதமான நடைமுறை எனவும், எதிர்காலத்தில் இது தொடரக்கூடாது என்பதற்கான பொறுப்பு தாராபுரம் தொகுதி வாக்காளர்களிடம் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் எதிர்பார்ப்பு

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளை பின்னுக்குதள்ளி 108 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றது முக்கியமான அரசியல் செய்தி எனவும், மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப்படைத் தீர்வு காணும் மாற்றத்தை எதிர்பார்த்தே தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர் எனவும்பாலபாரதி தெரிவித்தார். ஆனால் அந்த எதிர்பா ர்ப்புக்கு மாறான வகையில், அதிமுகவிலிருந்து வந்த வேட்பாளரையே மீண்டும்களமிறக்கியிருப்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

இடதுசாரி எம்எல்ஏக்களின் பணி

சட்டமன்றத்தில் இடது சாரிகளின் சார்பில் உள்ள நான்கு உறுப்பினர்களும் மக்களுக்காகக் குரல் கொடுத்து பாடுபட்டு வருவதாகவும், அடித்தட்டு ஏழைமக்களுக்கான ரேஷன் உரிமை, தூய்மைப் பணியில்தனியார்மயமாக்கலை எதிர்த்தல் உள்ளிட்ட உழைப் பாளி மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருவதாகவும் அவர் குறிப் பிட்டார்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு - இடதுசாரி போராட்ட வெற்றி

அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக நிலைகுலைந்திருந்த அருந்

ததியர் சமூகத்தினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கங்களின் நீண்ட காலப் போராட்டமே எனவும், இதன் காரணமாகவே அருந்ததியர் குடும்பங்களில் பலர் மருத்து வர்களாகவும் அரசுப் பணியாளர்களாகவும் முன்னேறி யுள்ளதாகவும் பாலபாரதி நினைவுகூர்ந்தார்.

வாக்களிப்பு வேண்டுகோள்

உழைப்பாளி மக்களுக் காகப் பாடுபடும் இடதுசாரிகளுக்கு ஆதரவளித்து, தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லட்சுமணனை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என பாலபாரதி மக்களிடம் வேண்டுகோள் விடுத் தார். இப்பிரச்சாரத்தில் சிபிஐ(எம்எல்) மாவட்டச்செயலாளர் முத்துகிருஷ் ணன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.