முந்தய பக்கம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!

6 Mar 2026, 11:15 am
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!
<p>சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.<br /> சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை அடுத்து, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை சென்னை உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.<br /> இதை தொடர்ந்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram