தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

7 Dec 2025, 3:52 pm
நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

நீதிபதி கே.என்.பாஷா ஆணையம் விரைவில் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள்

சென்னை, டிச.7 - நீதிபதி கே.என்.பாஷா ஆணை யம் விரைவில் பரிந்துரைகளை அளித்திட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கறிஞர்கள் -  செயற்பாட்டாளர்கள் கூட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சாதி ஆணவக் குற்றங்கள் மற்றும்  படுகொலைகள் தடுப்புச் சிறப்பு சட்டத்தை கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு நியமித்துள்ள நீதி யரசர் கே.என்.பாஷா தலைமையி லான ஆணையம் விரைவில் தனது பரிந்துரைகளை அளிக்கவும், அதற் கான அனைத்து நிர்வாக ஏற்பாடு, ஆதார வளங்களை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் வழக்கறிஞர்கள் கூட்டத்தின் தீர்மானம் கோரியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தலித் விடு தலைக்கான தேசிய மேடை (DSMM) அகில இந்தியத் துணைத் தலை வர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தி டம் முன் வைக்க வேண்டிய ஆலோ சனைகள் விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள், முன்னணியின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றனர். சாதி ஆணவக் குற்றங்களும், கொலைகளும் பெரும் அதிர்வை தமிழ் மண்ணில் ஏற்படுத்திக் கொண் டிருக்கும் சூழலில் இக்கொடுமை களுக்கு முடிவு கட்ட சிறப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டு மென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியும், பல்வேறு தலித்,  சமூக நீதி, ஜனநாயக,  அமைப்பு களும் போராடி வந்துள்ளன. இந்த  பின்புலத்தில் சிறப்புச் சட்ட உரு வாக்கத்திற்காக தமிழ்நாடு அரசு  நீதிபதி கே.என்.பாஷா தலைமையில்  ஆணையம் ஒன்றை அமைத்திருப் பது வரவேற்கத்தக்கது. ஆணையத் தின் காலவரம்பு மூன்று மாதங்கள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான அரசாணையும் வெளி யிடப்பட்டுள்ளது. சாதி ஆணவக் குற்றங்களும், கொலைகளும் தொடர்ந்து நடந்தேறி  வரும் வேளையில் சிறப்புச் சட்டத் தின் விரைவான நிறைவேற்றம் அவசி யமாகி உள்ளது. சாதி ஆணவக் கொலைகள் தடுப்பு, முன் தடுப்பு, பாதுகாப்பு, தீர்வு உதவி ஆகியன தாமதம் இல்லாமல் நடைமுறைக்கு வர வேண்டியுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு இதற் காக அமைக்கப்பட்டுள்ள ஆணை யத்திற்கு உரிய அலுவலகம்,  ஊழி யர்கள், ஆதார வளங்கள் உள்ளிட்ட  கட்டமைப்பு வசதிகளை விரைவில்  தந்து பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.  நீதிபதி கே.என்.பாஷா ஆணையத் திற்கு 3 மாத கால வரையறை தரப் பட்டு இருந்தாலும், பணிகளை விரைந்து முடித்து, வலுவான சட்டம்  நிறைவேற்றிட வேண்டுமென்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.