தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்எஸ்எஸ்-சை சேர்ந்தவர்

10 Dec 2025, 4:08 pm
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்எஸ்எஸ்-சை சேர்ந்தவர்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்எஸ்எஸ்-சை சேர்ந்தவர்

சென்னை, டிச. 10 - திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை (டிசம்பர் 10) அன்று  செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று, உயர் நீதிமன்ற  முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், ஜி.ஆர். சுவாமிநாதன் அவசர அவசரமாக வழக்கை விசா ரித்து, சட்டவிதிகளை மீறி தீர்ப்பு வழங்கியுள்ள தாக குற்றம் சாட்டினார். நீதிபதிகள் நடுநிலை யோடு செயல்பட வேண்டும் என்றும், ஆனால் இவர்  அப்படி செயல்படவில்லை என்றும் தெரிவித் தார். கோவில் நிர்வாகம் தவிர்த்து வேறு யாரும்  தீபம் ஏற்ற உரிமை இல்லை என்றும், 2021-இல் திருப்பதி கோவில் வழக்கில் தேவஸ்தானம்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி னார். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் எதிர்மனு தாரரின் பதிலை கேட்காமலேயே இறுதி ஆணை  வழங்கப்பட்டதாகவும் விமர்சித்தார். நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு 100-க்கும் மேற்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றும், அதுபோன்ற மதம் சம்பந்தப்படாத வழக்குகளில் எல்லாம் இவ்வ ளவு தீவிரம் காட்டியிருக்கிறாரா? என்றும் கேள்வி  எழுப்பினார்.

சிக்கந்தர் தர்கா அருகே இருப்பது நில அளவைக் கல்!

வழக்கறிஞர்  வாஞ்சிநாதன் சென்னை,  டிச. 10 - திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூண், நில அளவைக் கல் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளதாக வழக்கறி ஞர் வாஞ்சிநாதன் தெரி வித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வாஞ்சிநாதன், உச்சிப்பிள்ளையார் கோவிலில் இருக்கும் தீப மண்டபத்தில் இருப்பதுதான் தீபத்தூண் என்றும், அதற்கான ஆதா ரங்களும் தெளிவாக இருப்பதாக வும் தெரிவித்தார். அங்குதான் பல ஆண்டுகளாக கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படுவதாகவும் கூறினார். நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் இந்த வழக்கை முறை யாக கையாளவில்லை என்றும்,  விதிமீறல், சட்டமீறல் நடந்துள்ள தாகவும் குற்றம்சாட்டினார். பாஜக எப்படி அமலாக்கத் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துப் பயன்படுத்துகிறதோ, அதுபோல நீதிபதிகளையும் பயன்படுத்துவதாக சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி  கார்த்திகை திருநாளன்று வழக்கம்போல உச்சிப் பிள்ளை யார் கோவில் தீப மண்டபத்தில்  கார்த்திகை மகாதீபம் ஏற்றப் பட்டது. இந்து அமைப்புகள் தொடுத்த வழக்கில், மலை உச்சி யில் உள்ள நில அளவைக் கல்லில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி  அளித்திருந்தார். அவரின்  இந்த உத்தரவு முந்தைய வழக்குகளில் 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புகளுக்கு  மாறானது என்பதால், இவ்விவ காரத்தில் மேல்முறையீட்டுக்குச் செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. அதனடிப்படையில், தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், சங்-பரி வாரங்கள் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், திருப்பரங் குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு தற்போது இந்த வழக்கில்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.