வெல்லும் எளியோரின் நீதி! கண்ணீரைத் துடைத்த செங்கொடி இயக்கம்
23 Mar 2026, 5:33 pm
<p><strong>வெல்லும் எளியோரின் நீதி! கண்ணீரைத் துடைத்த செங்கொடி இயக்கம்</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 23- மழைக்காலம் வந்தாலே அந்தியூர் மைக்கேல்பாளையம் கிராமத்தில் உள்ள நேரு நகர் மக்களுக்கு நெஞ்சில் ஒருவித நடுக்கம் தொற்றிக்கொள்ளும். வான் மேகங்கள் கருக்கும்போதே, தங் கள் வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்துவிடுமோ என்ற அச்சம் சுமார் 30 பட்டியலின விவசாயத் தொழி லாளர் குடும்பங்களை வாட்டி வதைத்து வந்தது. சிமெண்ட் அட்டை போட்ட வீடு களும், கூரை வீடுகளுமே இவர்களின் உலகம். ஆனால், இவர்களின் வாழ் வாதாரத்தையே அச்சுறுத்தும் வகை யில் அமைந்திருந்தது ஒரு தனிநபரின் ஆக்கிரமிப்பு. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தி ருந்த அந்த நபர், மனிதாபிமானமற்ற முறையில் மழைநீர் வெளியேற விடா மல் தடுத்து, திட்டமிட்டே குடியிருப்புப் பகுதிக்குள் தண்ணீரைத் திருப்பி விட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தி வந்தார். அதிகார பலமும், ஆக்கிர மிப்புத் திமிரும் எளிய மக்களின் வாழ் வுரிமையை நசுக்கிக் கொண்டிருந்த வேளையில், அம்மக்கள் தஞ்சம் புகுந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யிடம். மக்களின் கோரிக்கையை ஏற்ற செங்கொடி இயக்கம், இது வெறும் தண் ணீர் பிரச்சனை மட்டுமல்ல, ஒடுக்கப் பட்ட மக்களின் அடிப்படை உரிமைக் ்கான போராட்டம் என்பதை உணர்ந்து களத்தில் இறங்கியது. கட்சியின் இடை விடாத தலையீட்டால், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித்துறை அதி காரிகள் திங்களன்று சர்ச்சைக்குரிய இடத்தை அளவீடு செய்ய நேரில் வந்த னர். அதிகாரிகளின் அளவீட்டில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஆக்கிரமிப்பாளர் தன்பேரில் உரிமை கொண்டாடிய இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்பதும், அவரது வீட்டின் ஒரு பகுதியே ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. எளிய மக்களின் குரலுக்கு அதிகாரத் தின் முன்னால் வெற்றி கிடைத்தது. தங்கள் வாழ்நாள் துயரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நேரு நகர் மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். ”எங்களுக்கு யார் இருக்கிறார்கள் என்று அஞ்சியபோது, தோளோடு தோள் நின்று உரிமையை மீட்டுத் தந்த செங்கொடிக்கு நாங்கள் கடமைப் பட்டுள்ளோம்” என அம்மக்கள் உணர்ச்சி பொங்கக் கூறினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. மாரிமுத்து மற்றும் அந்தியூர் தாலுகா கமிட்டி உறுப்பினர் ஏ.கே. பழனிசாமி ஆகியோர் இந்நிகழ்வின்போது உடனி ருந்தனர். அநீதி இழைக்கப்படும் இடங்களில் எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களின் கேட யமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் திகழும் என்பதற்கு இந்த நேரு நகர் நிகழ்வு மற்றுமொரு சாட்சியாக அமைந்துள்ளது.</p>
