அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு ததீஒமு ஆர்ப்பாட்டம்
9 hours before
<p><strong>அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு ததீஒமு ஆர்ப்பாட்டம்</strong></p><p>அவிநாசி,அக்.28-சாதிய துன்புறுத்தல் காரணமாக கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் அகிலன் மரணத்திற்கு நீதிகேட்டு அவிநாசியில் செவ்வாயன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மாணவன் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற, ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானசேகர், மாவட்டச் செயலாளர் பரமசிவம், மாவட்ட துணைத் தலைவர் நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர், செல்வி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, வாலிபர்சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் பிரவீன், சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
