தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களுக்கான மருத்துவத் தொழிலில் முழுமையான சேவைத்திறன் தேவை புத்தக வெளியீட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தல்

6 Oct 2026, 1:03 am
மக்களுக்கான மருத்துவத் தொழிலில் முழுமையான சேவைத்திறன் தேவை புத்தக வெளியீட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தல்

மக்களுக்கான மருத்துவத் தொழிலில் முழுமையான சேவைத்திறன் தேவை புத்தக வெளியீட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தல்

சென்னை, அக்.5–மருத்துவ சேவையைப் பொறுத்தமட்டில் முழுமையான பயிற்சித்திறன் முக்கியம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் கூறினார்.

சமூகஅக்கறை சார்ந்ததாக அந்தத்திறன் அமைய வேண்டும் என்றும் அவர்குறிப்பிட்டார். முன்னணி

ஹோமியோபதி மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் வாழ்க்கையையும் தடங்களையும் விவரிக்கும் ஆங்கிலப் புத்தகவெளியீட்டு விழா ஞாயிறன்று (அக்.4) சென்னையில் நடைபெற்றது.‘டிராப்ஸ் ஆஃப் ஹோப் லைஃப் அன் லெகசி ஆஃப் டாக்டர் பி.வி.வெங்கட்ராமன்’ என்ற அந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய நீதிபதி இவ்வாறு கூறினார்.

“பொதுவாகப் குறிப்பிட்ட துறைகளுக்கான தனித்துவத் திறன்(ஸ்பெஷலைசேஷன்) தேவைதான். பல்வேறு தொழில்களிலும் எங்கே பார்த்தாலும் அவ்வாறு வந்து விட்டது. ஆயினும் மக்களுக்கு அடிப்படையானதொரு சேவைத் தொழிலான மருத்துவத்தில் முழுமையான பணித் திறன் தேவைப்படுகிறது,” என்றார் அவர்.

புத்தகத்தில் இது வலியுறுத்தப்பட்டிருப்பதையும் அவர்சுட்டிக்காட்டினார். “சமூக அக்கறையோடு செயல்படுகிறவர்கள் நெருப்பாகவும் இருக்கவேண்டும், தன்னடக்கத்தோடும் அணுக வேண்டும். ஒருவரது திறமையையும் தொண்டு மனப்பான்மையையும் மதிப்பெண்களால்அளவிட்டுவிட முடியாது. வாழ்க்கை முழுமையடைய விரிவானவாசிப்பு தேவை,”என்றார் அவர். நூலின் முதல் படியைப் பெற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசின்முன்னாள் கூடுதல் தலைமைச் செயலர் குத்ஷியாபேகம் காந்தி,கடுமையான சில நோய்கள் தாக்கியபோது ஹோமியோபதி மருத்துவத்தால் பக்கவிளைவுகள் இல்லாமல் குணமடைந்தது பற்றித்தெரிவித்தார்.

நவீன வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மருத்துவம் உருவெடுத்திருப்பதைக் குறிப்பிட்ட அவர், அலோபதி, ஹோமியோபதிஉள்ளிட்ட மருத்துவமுறைகள் ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்கவேண்டியதில்லை, ஒன்றுக்கொன்று பங்களிப்பதாக இருக்க முடியும் என்றுகூறினார்.

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் சி.ஜே. ராஜ்குமார், தொழிலில் முன்னேறுவதோடு முற்போக்கான சிந்தனைகளோடு தொண்டாற்றுவதிலும் எடுத்துக்காட்டாக அமைத்துக்கொண்ட வாழ்க்கை என்பதாலேயே இதை எழுதியதாகத் தெரிவித்தார்.நிறைவுரையாற்றிய பி.வி. வெங்கட்ராமன், நோய்வாய்ப்படுகிறபோது சிகிச்சை எடுத்துக்கொள்வதோடு அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ள முயல்கிற நோயர்களே நல்ல மருத்துவர்களை உருவாக்குகிறார்கள் என்றார்.மனித உரிமைப் போராளியான தமது சகோதரர் பி.வி.பக்தவச்சலம், இணையர் மருத்துவர் ஜெகதா உள்பட ஒட்டு மொத்தக்குடும்பஉறுப்பினர்களின் ஒத்துழைப்பைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக அக்கறையே அதன் மையம் என்றும் கூறினார்.மூத்த மருத்துவர்கள் ஆர்.சுரேந்திரன், முத்தையா, அன்ஷூ பன்சால்,ஜெகதா, எழுத்தாளர் மயிலை பாலு, பதிப்பாளர்வேடியப்பன் உள்ளிட்டபலரும் உரையாற்றினர். குழந்தைகள் துஷில் என்.கிருஷ்ணா, ஜுஹி தொடக்க இசை வழங்கினர். நிகழ்வுகளை ராஜேஸ்வரி தொகுத்தளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.