தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக் கைதிகளின் விடுதலை ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க நீதிபதி அக்பர் அலி அறிவுறுத்தல்

8 Mar 2026, 3:42 pm
சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக் கைதிகளின் விடுதலை  ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க நீதிபதி அக்பர் அலி அறிவுறுத்தல்
<p><strong>சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக் கைதிகளின் விடுதலை &nbsp;ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்க நீதிபதி அக்பர் அலி அறிவுறுத்தல்</strong></p> <p>சென்னை, மார்ச் 8 - குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதி ராகப் போராடி, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிணையின்றி சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் முறையிடு வதே தற்போதைய சிறந்த தீர்வாக இருக்கும் &nbsp;என்று ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி தெரிவித்துள்ளார். நீதிக்கு புறம்பாக உபா சட்டத்தில் கைது &nbsp;செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறையில் &nbsp;வைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷார்ஜீல் இமாம் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை &nbsp;செய்யக் கோரி அண்மையில் சென்னையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிறையில் உள்ளவர்களின் நிலை மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து பின்வரும் முக்கியக் &nbsp;கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்: குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது வெறும் முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கும் ஒன்றல்ல, இது சமூகத்தின் அடித்தட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கக்கூடியது என்பதை அப்துல் ஜப்பார் போன்றோர் தனது எழுத்துக்கள் மூலம் அன்றே தெளிவு படுத்தியுள்ளனர். 5 ஆண்டு சிறைவாசம் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போராட் டங்கள் தொடர்பாகக் கைது செய்யப் பட்டவர்கள், இன்று வரை ஐந்து ஆண்டுகளுக் கும் மேலாக பிணை கிடைக்காமல் சிறை யில் வாடுவது கவலையளிக்கிறது. இவர்களது வழக்குகள் கீழ் நீதிமன்றம் முதல் &nbsp;உச்ச நீதிமன்றம் வரை பல முறை ஏறி இறங்கியும், கடந்த ஐந்து ஆண்டுகளாக முறையான தீர்வு கிடைக்காமல் இழுபறி யாகவே நீடிக்கிறது. சட்ட முரண்பாடுகள் உபா சட்டத்தின் கீழ் ஒரு சிலருக்கு பிணை &nbsp;வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கு &lsquo;மேலோட்ட மான ஆதாரங்கள்&rsquo; இருப்பதாகக் கூறி &nbsp;பிணை மறுப்பது சட்ட ரீதியான முரண்பாடு ஆகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் &nbsp;என்ற அடிப்படையில் இந்தப் பாகுபாடு களையப்பட வேண்டும். ஜனாதிபதிக்குக் கோரிக்கை நீதிமன்றங்களில் தீர்வு கிடைக்கத் தாமதமாகும் சூழலில், ஜனாதிபதியிடம் கரு ணை மனு மற்றும் கையெழுத்து இயக்கம் மூலம் இந்தக் கோரிக்கையைச் சட்ட ரீதி யாகக் கொண்டு செல்ல வேண்டும். இதுவே &nbsp;கைதிகளின் விடுதலைக்கான ஒரு நல்ல நோக்கமாக அமையும். இந்தக் கைதிகளின் விடுதலைக்காக ஒரு ஒருங்கிணைந்த முயற் சியை முன்னெடுக்க வேண்டியது அவசியம் &nbsp;என்று அவர் வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.