முந்தய பக்கம்

ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு

20 Nov 2025, 3:46 pm
ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு</strong></p> <p>உடுமலை,நவ.20- ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி கள் வரும் நவ.28 ஆம் தேதி முதல் டிசம்பர் 10 வரை சென்னை, &nbsp;மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. உலகின் தலை சிறந்த 24 அணிகள் பங்கேற்கும், இந்த போட்டிகளை தமிழக &nbsp;அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் இணைந்து நடத்துகின்றன. கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வலம் வரும் உலக &nbsp;கோப்பை நிகழ்ச்சியை தமிழக துணை முதல்வர் உதயநிதி &nbsp;ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிலையில், &nbsp;கடந்த புதனன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை வித்யாசாகர் &nbsp;கலை அறிவியல் கல்லூரிக்கு வந்திருந்த உலக கோப்பைக்கு &nbsp;பேண்ட் வாத்தியங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு &nbsp;அளிக்கபட்டு, அறிமுக விழா நடைபெற்றது. மேலும், இந்த &nbsp;போட்டிக்கான லோகோவான காங்கேயம் காளை சின்னமும் &nbsp;அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவரே, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி &nbsp;மற்றும் ஹாக்கி சங்க நிர்வாகிகள், வீரர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram