மக்களின் காசில் நீதித்துறையின் லண்டன் உல்லாசம்!
23 Jun 2026, 9:16 pm
<p><strong>மக்களின் காசில் நீதித்துறையின் லண்டன் உல்லாசம்! </strong></p><p>நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு மன அழுத்தமும், அதற்கான ஓய்வும் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அந்த ஓய்வும் உல்லாசமும் எங்கே, யாருடைய செலவில் நடந்தது என்பதுதான் இங்கே எழும் முதன்மையான கேள்வி. சமீபத்தில் நாட்டின் தலைமை நீதிபதி உட்பட சுமார் 150 நீதிபதிகள், சட்ட அமைச்சர் மற்றும் வழக்கறிஞர்கள் அரசு செலவில் லண்டனுக்குச் சென்று, பூப்பந்து (பேட்மிண்டன்) விளையாடித் தங்களின் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொண்டுள்ளனர். மக்களின் வரிப்பணத்தில் இந்த உல்லாசப் பயணம் அரங்கேறியுள்ளது. பிரதமர் சமீபகாலமாக மேடைகளில் பேசி வரும் ‘சிக்கனம்’ என்னவாயிற்று என்ற கேள்வி எழுகிறது. நீதிபதிகளும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் இணைந்து இப்படி உல்லாசப் பயணம் மேற்கொள்வது நீதியின் பாரபட்சமற்ற தன்மை யைப் பாதிக்காதா? நீதிபதி களுக்கான நடத்தை விதிகள் எங்கே போயின? இத்தகைய கேள்விகளுக்குப் பதி லளிக்க எவரும் தயாராக இல்லை. மக்களின் இறுதிப் புகலிடமாக விளங்கும் நீதிமன்றங்களின் தகுதியும் நடுநிலைமையும் இது போன்ற செயல்களால் நீர்த்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
