தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தம் அவசியமே! விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

4 Dec 2025, 3:52 pm
இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தம் அவசியமே! விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
<p><strong>இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தம் அவசியமே</strong>! <strong>விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்</strong></p> <p>வேலூர், டிச.4 - &nbsp;இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தம் உடனடியாக அவசியமா னதாக உள்ளது என விஐடி பல்கலைக் கழக வேந்தர் கோ. விசுவநாதன் வலி யுறுத்தியுள்ளார். வேலூரில் விஐடி பல்கலைக்கழ கத்தில் நடைபெற்ற வழக்குரைஞர் வி.சி. ராஜகோபாலாச்சாரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவர் தலைமை வகித்து உரை யாற்றினார். அவர் தம்உரையில், சட்டத்தின் ஆட்சி குறியீட்டில் (World Justice Project) 143 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 86-ஆக உள்ளது. டென்மா ர்க், நார்வே போன்ற நாடுகளைப் போன்று இந்தியா முழுமையான ஜனநாயக நாடாக மாற வேண்டும். இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நவம்பர் 2025 நிலவரப்படி 5 கோடியே 30 லட்ச மாக உயர்ந்துள்ளது. இதில், 1.70 &nbsp;லட்சம் வழக்குகள் 30 வருடங் களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகளைக் களைய நீதித்துறை சீர்திருத்தம் அவசியமாகும். மேலும், இந்தியாவில் 75% கைதிகள் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். 11ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 5 ஆண்டு களுக்கும் மேலாக தீர்ப்பு வழங்கப்படாமல் சிறையில் இருக்கின்றனர். விரைவான நீதிக்கு, சிவில் வழக்குகளுக்கு அதிகபட்சம் 20 மாதங்கள், கிரிமினல் வழக்குகளுக்கு 12 மாதங்கள் என்ற கால வரம்பை நிர்ணயிப்பதுடன், போதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இந்தியாவில் 1 மில்லியன் மக்களுக்கு 15 நீதிபதிகளே உள்ளனர். இது இங்கிலாந்து (57), அமெரிக்கா (150-151), சீனா (300) ஆகிய நாடு களை விட மிகவும் குறைவு என்று அவர் சுட்டிக்காட்டினார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் பேசுகையில், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் உறவு இன்றைய காலத்தின் மிக முக்கிய சவாலாகும். டிஜிட்டல் யுகத்தில் உரிமை களையும் பொறுப்புகளையும் பாது காக்க சட்ட அமைப்புகள் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். தொழில்நுட்பம் சட்டப் பணியில் புரட்சிகரமான வளர்ச்சியை ஏற்படுத்தி, ஆவணங்களை அணுகு வதையும் தீர்ப்பளிப்பதையும் எளிமை யாக்கியுள்ளது. சட்டத் தொழில்நுட்பச் சந்தை 2027-க்குள் $35 பில்லியன் டாலர் களை எட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. நிலுவையில் உள்ள வழக்கு களில் 60% அரசால் தான் போடப்படு கின்றன. அரசு தேவையற்ற மேல்முறை யீடுகளைத் தவிர்த்தால் தான் நிலைமை மாறும் என்றும் அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.