தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

10 Oct 2026, 2:10 am
நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீதித்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.9-நீதிமன்ற அலுவலக உதவியாளர் செல்வீஸ்வரி தற்கொலை முயற்சிக்கு காரணமான நடுவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் திருஞானம் தலைமை தாங்கிப் பேசியவதாவது:- சாத்தூர் குற்றவியல் நடுவர் மன்ற எண். 2 நீதி மன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் செல்வீஸ்வரி. இவர் சம்பவத்தன்று காலை 8.30 மணிக்கு நீதிபதி குடியிருப்பு வளாகத்தில் எறும்பு பொடி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம், நீதிபதிகள் குடியிருப்பில் வசிக்கும் நடுவர் தான் என்று கூறப்படுகிறது. நடுவர் குடும்பத்தின் வீட்டு வேலைகளை தினமும் செய்வதோடு, உடல்நிலை சரி யில்லாத நடுவரின் மாமியாருக்கும் பணிவிடை செய்யும்படி செல்வீஸ்வரி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வீட்டு வேலைகளை நீண்ட நேரம் செய்ய வைத்து இரவில் காலதாமதமாகவே செல்வீஸ்வரியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த மாத ஊதியத்தை கூட இதுவரை செல்வீஸ்வரிக்கு வழங்க வில்லை. மேலும் சாத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர், கடும் வேலைகளை செய்ய வைத்து செல்வீஸ்வரியை துன்புறுத்தியதால்தான், மன உளைச்சலில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நந்தகுமார், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா,சத்துணவு ஊழியர் சங்க தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக சங்க நிர்வாகி தாமரை செல்வன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.