முந்தய பக்கம்

பள்ளி விழாவில் நீதிபதி

18 Jul 2026, 9:17 pm
பள்ளி விழாவில் நீதிபதி
<p><strong>பள்ளி விழாவில் நீதிபதி </strong></p><p>திருவில்லிபுத்தூர், ஜூலை 18- திருவில்லிபுத்தூர் அருகே அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமையாசிரியர் வேணுகோபால் தலைமையில் நடை பெற்றது. ஆசிரியர் நாகராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கூடுதல் சார்பு நீதிபதி ரத்தின வேல் பாண்டியன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். வட்டாரக் கல்வி அலுவலர் முருகேசன் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள், பள்ளி கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் புதூர் முகைதீன் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram