கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு சிபிஐ விசாரணையை கண்காணிக்க நீதிபதி வருகை
30 Nov 2025, 4:29 pm
<p><strong>கரூர் கூட்ட நெரிசல் பலி வழக்கு சிபிஐ விசாரணையை கண்காணிக்க நீதிபதி வருகை</strong></p>
<p>கரூர், நவ.30 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27 ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இதில் ஏற்கனவே பலியான 12 பேரின் குடும்பத்தி னர் மற்றும் உறவினர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத் தது. இந்த குழுவில் ஐபிஎஸ் அதிகாரிகள் சுமித் சரண், சோனல் வி.மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்புக்குழு, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை கண்காணிக்க திங்கட்கிழமை கரூருக்கு வருகை தர உள்ளதாக கூறப்படு கிறது. இந்த வழக்கின் விசாரணையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் வருகையால் இந்த வழக்கு விசாரணை பர பரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.</p>
