நியூஸ் தமிழ் செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கடத்தி தாக்குதல் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
2 Feb 2026, 3:32 pm
<p><strong>நியூஸ் தமிழ் செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கடத்தி தாக்குதல் பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவாரூர், பிப்.2- நியூஸ் தமிழ் தொலைக் காட்சி செய்தியாளர், ஒளிப் பதிவாளர் கடத்தி தாக்கப் பட்டதைக் கண்டித்து, திரு வாரூர் மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடக செய்தியா ளர்கள் சார்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நியூஸ் தமிழ் தொலைக் காட்சி திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ் நேசன் தலைமை ஏற்றார். சமூக ஆர்வலர்கள் சண்முகசுந்த ரம், எஸ். நவமணி மற்றும் தீக்கதிர் மாவட்ட செய்தியா ளர் எஸ். நீதிராஜன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றி னர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில், ஶ்ரீ ரங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனி யாண்டிக்குச் சொந்தமான கல் குவாரியில், செய்தி சேக ரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் செபாஸ்டின் ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் பழ னியாண்டி ஆதரவாளர்கள் மற்றும் குண்டர்கள் தாக்கி யுள்ளனர். செய்தியாளர் களை தாக்கிய குண்டர் களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். பத்திரி கையாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனி யாண்டி மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
