தோழர் ஆர்என்கே உடலுக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி
26 Feb 2026, 5:09 pm
<p><strong>தோழர் ஆர்என்கே உடலுக்கு பத்திரிகையாளர்கள் அஞ்சலி</strong></p>
<p>சென்னை, பிப்.26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும் சுதந்திரப் போராட்ட வீர ருமான தோழர் நல்லகண்ணு (101) கால மானதைத் தொடர்ந்து, முதலமைச்சர்ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலை வர்கள், தொழிற் சங்கத்தி னர், வெகு ஜன அமைப்பி னர், சமூக ஆர்வலர்கள், திரைத்துறையினர் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.எளிமை, நேர்மை மற்றும் சமூகப் பங்க ளிப்பைப் போற்றி, முழு அரசு மரி யாதையுடன் வியாழ னன்று தோழர் ஆர்என்கே வின் விருப்பப்படி, உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) ஆராய்ச்சிக்காக வழங்கப் பட்டது. அவரது உடலுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கே.முத்து ,அமைப்புச் செய லாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட செய லாளர் எஸ்.பி தேவேந்திரன், துணைத் தலைவர் ஆர். ஜெயராஜ் செயற்குழு உறுப்பினர் மேன்மை மணி மற்றும் சங்க உறுப்பி னர்கள் தன சேகர் (தினபூமி), அக்னி பாரதி (மீடியா செய்தி) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.</p>
<p> </p>
