பத்திரிகையாளர்களா பயங்கரவாதிகளா?
9 Apr 2026, 5:30 am

பத்திரிகையாளர்களா பயங்கரவாதிகளா?

விஜய்யின் பிரச்சாரப் பயணம் குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

"விஜய் எங்கெல்லாம் வருவார்?" என்று கேட்டதற்கு, "போலீஸ் அனுமதி கொடுத்தால் சொல்வோம்" என்றார் ஆனந்த். "போலீஸ் அனுமதி கொடுத்து விட்டதே" என்று செய்தியாளர் கேட்க, "இதற்காகத்தான் பிசிஆர் மீட் கொடுப்பீங்களா?" என்று சத்தமாகப் பதிலளித்துள்ளார்.

கேள்விகளுக்குப் பதில் சொல்லத் துணிவில்லாதவர்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூணைத் தற்காத்துப் பார்ப்பது அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையை அப்பட்டமாக காட்டுகிறது!