தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தன்னையே பணயமாக்கிய பத்திரிகையாளர்!

16 May 2026, 8:07 pm
தன்னையே பணயமாக்கிய பத்திரிகையாளர்!

தன்னையே பணயமாக்கிய பத்திரிகையாளர்!

பீகாரை சேர்ந்த மஹிமா சிங், ஒரு துப்பறியும் பத்திரிகையாளர் இவருக்கு சில தினங்களுக்கு முன் ஒரு ரகசிய துப்பு கிடைத்தது.

கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் இளம்பெண்கள், சிறுமிகளை கடத்தி அல்லது விலைக்கு வாங்கி வெளிநாடுகளில் இருக்கும் புரோக்கர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கசிந்தது.

ஆனால், இது பற்றி ஒரு இம்மியளவு துப்பு கூட கிடைக்க வில்லை.

அதனால், ஒரு சாதாரண ஏழை வீட்டு பெண் போல உடை அணிந்து ஆளே மாறி போனார்.

ஆர்கெஸ்டிரா என்ற இந்த மிக மிக ஆபத்தான மறைவிடங்களுக்கு சென்றார். ஏதாவது வேலை போட்டு குடுங்க சார்.

சாப்பாடு போட்டா போதும் என கெஞ்சினார். அவள் அழகை பார்த்து மயங்கிய அந்த ஆட்கள் மஹிமாவை சேர்த்துக் கொண்டனர்.

மறைத்து வைத்த இரு கேமராக்கள் உடன் அங்கு நடக்கும் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் வீடியோவாக ஒளிப்பதிவு செய்தார்.

மொத்தம் ஐந்து நாட்கள் அங்கு தங்கி இருந்தார். அ

ப்போது பெண்களை வாங்கும் புரோக்கர்கள், மாமா வேலை பார்ப்பவர்களில் மூன்று பேர் இவரை வாங்கி லாபம் அதிகம் வைத்து மற்றவர்களிடம் விற்று விட்டார்கள்.

அதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு சிறிய அறைக்கு ரவுடிகள், குண்டர்கள் வந்து கஸ்டமர்கள் டான்ஸ் ஆட சொன்னால் ஆட வேண்டும்.

படுக்க சொன்னால் படுக்க வேண்டும் என்று மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். ஐந்தாவது நாள் ஒரு ரவுடி வந்தான்.

கைத்துப்பாக்கி ஒன்றை மிரட்டும் வகையில் காட்டி விட்டு இன்று இரவு உனக்கு முதலிரவு.

என்ஜாய்னு சொல்லி விட்டு போனான். இந்த ஐந்து நாட்களும் அங்கே நடக்கும் அத்தனையையும் ஷூட் பண்ணி முடித்து இருந்தார் மஹிமா.

கடத்தப்பட்டு வந்து இங்கே சிறை பிடிக்கப்பட்ட பெண்களும், சிறுமிகளும் மே. வங்கம், அசாம், நேபாள எல்லைப்பகுதி, ஒடிசாவை சேர்ந்தவர்கள்.

உள்ளூர் விபசாரத்தில், ஈடுபடுத்தப்பட்டார்கள்.

16, 18 வயது பருவ பெண்களை போல மாற சிறுமிகளுக்கு ஹார்மோனல் ஊசிகளையும் போட்டு வந்து இருக்கிறார்கள் அந்த கயவர்கள்.

ஒரு வேளை எந்த பெண்ணாவது கர்ப்பமாகி விட்டால், பிறக்கும் சிசுக்களையும் நல்ல விலைக்கு விற்று விடுவார்களாம்.

தனக்கும் ஆபத்து நெருங்கியதால், யார் கண்ணிலும் படாமல் அங்கு இருந்து தப்பி தனது ஊருக்கு வந்து அவர் வேலை பார்த்த பத்திரிகையின் முதலாளிக்கும், செய்தி ஆசிரியருக்கும் வீடியோ போட்டு காட்டினார்.

அதிர்ந்து போன இருவரும், மாநில தலைமை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பெரிய போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு சிவான், சரன் ஆகிய மாவட்டங்களிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் சோதனைகள் நடத்தி மஹிமாவை விற்றவன் முதல் எல்லா புரோக்கர்களையும் கூண்டோடு மடக்கி பிடித்து இருக்கிறார்கள் போலீசார்.

அத்துடன் கடத்தி வரப்பட்ட ஏராளமான பெண்கள், சிறுமிகளையும் மீட்டு அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மறு நாள் காலை பேப்பரில் இந்த செய்தி புகைப்படங்களோடு வெளியாக, டிவி சானல்களும் செய்தியாக போட மொத்த வட மாநிலங்களும் அதிர்ச்சியில் உறைந்து போயின.

தன் உயிரையும் மதிக்காமல், துணிச்சலாக துப்பறிந்து இதை அம்பலமாக்கிய மஹிமாவை, சோஷியல் மீடியாக்களும், டிவி சானல்களும், பொது மக்களும், குறிப்பாக பெண்களும் மஹிமாவை கொண்டாடி வருகிறார்கள்.

அரசியல் கட்சிகள் வீசி எறியும் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவான செய்திகளை மட்டும் போடும் தேசிய மீடியாக்களுக்கு நடுவில், துப்பறியும் ஆபத்தான இந்த சட்ட விரோத கும்பல்களின் கோட்டைக்கு உள்ளேயே புகுந்து இவர்களை போலீசில் பிடித்துக் கொடுத்து, பல பெண்களின் உயிரையும் காப்பாற்றி இருக்கிறார் இந்த இளம் வீர பெண்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.