ஜோலார்பேட்டையில் தட்சண ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:38 am
<p><strong>ஜோலார்பேட்டையில் தட்சண ரயில்வே ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பத்தூர், ஜூன் 20- ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் பகுதியில் தட்சண ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளைத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, சேலம் கோட்டத் தலைவர் முத்துக் கிருஷ்ணன் தொடங்கி வைத்துக் கண்டன உரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், பெண் தொழிலாளர்களுக்குத் தனி ஓய்வறை அமைக்க வேண்டும் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. இதில் கிளைச் செயலாளர் டேனியல், பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் குமார், தமிழரசன், சங்கர், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
