கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிக்க டாஸ்மாக் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணிக்க டாஸ்மாக் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவு</strong></p>
<p>சென்னை, நவ.16 - மண்டல மேலாளர் நடத்தும் கருத்து கேட்கும் கூட்டத்தில் புறக்கணிப்பது என்று டாஸ்மாக் சங்கங்களின் கூட்டுக்குழு முடி வெடுத்துள்ளது. டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையன்று (நவ.15) சென்னையில் நடைபெற்றது. சொ. இரணியப்பன் (ஏஐசிசிடியு) தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கே.திருச் செல்வன், பி.முருகன் (சிஐடியு) மற்றும் டியுசிசி, பாட்டாளி தொழிற்சங்கம், எஸ்.சி,எஸ்டி சங்கம், விற்பனையாளர் நலச் சங்கம், டாஸ்மாக் மேற்பார்வையாளர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். ஊழியர்களின் சட்டப்பூர்வமான பணி வரன்முறை, காலமுறை ஊதியம், வார விடுமுறை, தேசிய மற்றும் பண்டிகை கால விடுமுறை, மிகை நேர ஊதியம், பிழைப்பூதியம், இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டம், சுழற்சி முறை பணியிடமாறுதல், நிலையாணை சட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்த முடி வெடுக்கப்பட்டது. காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டம் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த நிர்வாகம் கடைபிடிக்கும் அணுகு முறை ஏற்புடையதல்ல. எனவே, மண்டல மேலாளர் நடத்தும் கருத்து கேட்கும் கூட்டத்தை கூட்டுக்குழு புறக்கணிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.</p>
