தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத பாஜக அரசை கண்டித்து கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

29 Nov 2025, 4:58 pm
தொழிலாளர் விரோத பாஜக அரசை கண்டித்து கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
<p><strong>தொழிலாளர் விரோத பாஜக அரசை கண்டித்து கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு</strong></p> <p>நாமக்கல், நவ.29- தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு தொகுப்புக ளாக மாற்றி அமுல்படுத்தியதை திரும்ப பெற வேண்டும் &nbsp;என வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை முன்பு சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் டிச.8 ஆம் தேதி ஆர்ப் பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட் டக் குழு அலுவலகத்தில் கூட்டு குழு கூட்டம் சனியன்று &nbsp;நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செய லாளர் க.அன்புமணி தலைமை வகித்தார். இதில், &nbsp;தொழிலாளர் நல சட்டங்கள் நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளனர். இதனை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடுமுழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் வந்த &nbsp;பிறகு, ஒன்றிய பாஜக அரசு இதனை நடைமுறைப் படுத்தியுள்ளது. இச்சட்டத்தால், தொழிலாளர்கள் வேலை நேரம் கூடுதலாகும். தொழிற்சாலைகளில் சங்கம் வைக்கும் உரிமைகள் பறிபோகும். பெரிய ஆலைகளில் தொழிலாளர்கள் வேலையில் இருந்து வெளியேற்றும் அபாயம் ஏற்படும். மேலும் உழைப்பு சுரண்டல் கூடும், எனவே, இச்சட்டத்தை திரும்ப பெற &nbsp;வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் டிசம்பர் 8 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் பூங்கா சாலை முன்பு ஆர்ப்பாட் டம் நடத்துவது என கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் மும்பை அர்ஜுனன், மைய &nbsp;மாவட்டச் செயலாளர் நீலவனத்துநிலவன், மேற்கு மாவட்டச் செயலாளர் முகிலன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், ந.வேலுசாமி, சு. சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.