தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Aug 2026, 9:13 pm

சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் டைட்டானியம்-டை-ஆக்சைடு முறையற்ற குறைந்த விலைக்கு விற்கப்படுவதால், இந்திய உள்நாட்டுத் தொழில் துறைக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் ஒன்றிய அரசு இறக்குமதித் திணிப்புத் தடை வரியை அமல்படுத்துவதற்கான சுங்கத்துறை அறிவிப்பாணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன் குமார் மிஸ்ரா பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அதனால்தான் நல்சார் விவகாரத்தில் அடாவடி உத்தரவை வெளியிட்டுள்ளார். அவரது நிலைப்பாடு பாஜகவின் நிலைப்பாடாகக் கருதப்படுகின்றது. மோடியின் உத்தரவின் பேரில்தான் சட்ட மாணவர்களும் குறிவைக்கப்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது?

மும்பை சட்ட மாணவர்கள் யூனிட்

நல்சார் விவகாரத்தில் பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவரின் உத்தரவு முக்கியமல்ல. ஆனால் இந்த உத்தரவை பிறப்பிக்க அவரிடம் கூறியது யார்? பாஜகவினரின் உத்தரவு இல்லாமல் மாணவர்களுக்கு எதிராக அவர் அடாவடி அறிவிப்பை பிறப்பித்து இருக்க மாட்டார்.

என்சிபி (சரத்) மூத்த தலைவர் சுப்ரியா சுலே

ஹல்தவானியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்ட விதத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மற்றும் விளக்கம் அளிக்க வேண்டும்.