தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வந்தே மாதரம் பாடல் அவமதிப்புக்கு தண்டனை தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி நோட்டீஸ்!

20 Jul 2026, 3:05 pm
வந்தே மாதரம் பாடல் அவமதிப்புக்கு தண்டனை தொடர்பான மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜான் பிரிட்டாஸ் எம்.பி நோட்டீஸ்!

வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கும் 'தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026'-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் விதி 67-இன் கீழ் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலுக்கு தடங்கல் ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில், 'தேசிய கௌரவத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026'-ஐ, அறிமுகம் செய்து, நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மசோதாவை எதிர்த்து சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் விதி 67-இன் கீழ் நோட்டீஸ் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த நோட்டீஸில், தேசியப் பாடல் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படை நோக்கத்திற்கு இந்த மசோதா முரணானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.