தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சி.ஆர்.பி.எஃப் தாக்குதல் – நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு ஜான் பிரிட்டாஸ் எம்.பி கடிதம்!

yesterday
சி.ஆர்.பி.எஃப் தாக்குதல் – நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு ஜான் பிரிட்டாஸ் எம்.பி கடிதம்!

தில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதற்காக தான் கடுமையாக கையாளப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:

“ஊடகங்களிடம் பேசியதற்காக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறை வாகனத்திற்குள் கடுமையாகக் கையாளப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு, அநாகரிகமாக நடத்தப்பட்டு, பின்னர் சாலையோரத்தில் வீசப்பட்டுள்ளார்.

இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி மீதான தாக்குதலாகும். அமைதியான போராட்டங்களையும் அரசியலமைப்பு உரிமைகளையும் பாதுகாக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது என்பது இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இது குறித்து அவசர நடவடிக்கையை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமை தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவும் கோரி, இந்தியக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

அரசாங்கத்தால் ஜனநாயகத்தை மிரட்டி மௌனமாக்க முடியாது. விவாதத்தின் வலிமைக்கு மாற்றாகத் தடியடியின் வலிமையைப் பயன்படுத்தவும் முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மாற்றுக்கருத்துகள் அசௌகரியமாகத் தோன்றுகின்றன என்பதற்காக மட்டும், மக்கள் தங்கள் அரசியலமைப்புச் சார்ந்த உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அரsu எதிர்பார்க்கக்கூடாது. ஒரு ஜனநாயகத்தின் வலிமை என்பது மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் திறனில் இல்லை; மாறாக, அவற்றை எதிர்கொண்டு கையாளும் திறனில்தான் உள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.