தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் விளைவுகள் மோசமாகும்! நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. ஆவேசம்

5 Dec 2025, 4:21 pm
தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் விளைவுகள் மோசமாகும்! நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. ஆவேசம்
<p><strong>தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிடில் விளைவுகள் மோசமாகும்! நாடாளுமன்றத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. ஆவேசம்</strong></p> <p>புதுதில்லி, டிச. 5- &nbsp;தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை மோடி அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்றும், இல்லையேல் விவசாய சட்டமுன்வடிவுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எச்சரித்தார். &nbsp;சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்டம் &nbsp;நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வியாழனன்று அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் அவர் பேசியதாவது: &nbsp;தொழில்மயத்தை எளிமையாக்குகிறோம் என்ற பெயரில், தொழிலாளர்களை எளிதாகச் சுரண்டுவது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இது கார்ப்பரேட்டுகளின் காட்டு ராஜ்ஜியத்திற்கு வழிவகுக்கும். மோடியின் ராஜ்ஜியத்தில், &lsquo;வேலையை வாங்கி முடித்தபின் தூக்கியெறியும்&rsquo; (Hire and Fire) கொள்கையை நிறைவேற்றும் விதத்தில், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் இல்லாமல் அவசர அவசரமாக நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. &nbsp;பாதுகாப்பு வரம்பிலிருந்து நீக்கம் &nbsp;இச்சட்டங்களுக்கு பாஜகவின் கீழ் இயங்கும் பி.எம்.எஸ். தொழிற்சங்கப் பிரிவு மத்தியிலும் கூட கடுமையான எதிர்ப்பு இருந்தது. இச்சட்டங்களால் தொழில்நிறுவனங்களில் 70 சதவீதமும், தொழிலாளர்களில் 74 சதவீதத்தினரும் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வரமாட்டார்கள். அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாறுவார்கள். மேலும், ஆட்குறைப்பு அல்லது பணிநீக்கம் செய்ய அரசாங்கத்தின் அனுமதியைப் பெறும் வரம்பு 100 தொழிலாளர்களில் இருந்து 300 தொழிலாளர்கள் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. &nbsp;வரலாற்று உரிமைகள் பறிப்பு &nbsp;புதிய சட்டங்கள் 12 மணி நேர ஷிப்டையும் வழங்குகின்றன. 1886 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற, 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுதுபோக்கு என்ற உரிமையை இச்சட்டங்கள் பறிக்கின்றன. அனைத்து பாசிச ஆட்சிகளும் முதலில் செய்வது தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது அல்லது தடை செய்வதுதான். நமது நாட்டிலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. &nbsp;வேலைநிறுத்தம் கிரிமினல் குற்றம் &nbsp;வேலைநிறுத்தம் செய்வதற்கான தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை இச்சட்டங்கள் நீர்த்துப்போகச் செய்துள்ளன. பல வருட போராட்டம், தியாகம், இரத்தம் மற்றும் வியர்வையின் விளைவாக தொழிலாளர்கள் வென்ற உரிமைகள் யாருடைய சலுகையும் அல்ல. இப்போது, அரசாங்கம் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றி இருக்கிறது. &nbsp;நீங்கள் &lsquo;அடிப்படை ஊதியத்தை&rsquo; (floor wage) அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஆனால் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட அங்கீகரிக்கவில்லை. எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும், அது தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் (fair wage) வழங்கிட முன்வர வேண்டும். இந்த அரசாங்கம் வழக்கம்போல், பொதுப் பட்டியலில் (concurrent list) இருக்கும் தொழிலாளர் துறையில் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க விரும்புகிறது. &nbsp;எனவே, இந்தத் தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிடில், சஞ்சார் சாத்திக்கு ஏற்பட்ட கதியையே இது சந்திக்கும் என்று நான் எச்சரிக்கிறேன். &lsquo;இந்தியா&rsquo; கூட்டணிக் கட்சிகள் இதன்மீது கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. &nbsp;இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் எம்.பி. பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.