முந்தய பக்கம்

நில அளவையர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 2:24 am
நில அளவையர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

நில அளவையர்களுக்குப் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, செப். 28-தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில், அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலி யுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நில அளவைப் பணியின் போது அரசு ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக நடை பெறும் வன்முறைச் சம்பவங்களுக்கு இம்மாநாட்டில் கடும் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டது. மேலும், அரசு ஊழி யர்கள் அச்சமின்றிப் பணியாற்ற ஏது வாகத் தமிழக அரசு உடனடியாக "சிறப்புப் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை" இயற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட தலைவர் ஆனந்தபாபு தலைமை தாங்கி னார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம். எழில் இளம்வழுதி, செய லாளர் வ. பரிசலா வான சாஸ்திரி, இணை செயலாளர் பூபதி, மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஜெ. மகேஸ்வரி மற்றும் பொறுப்பாளர் எஸ். முரளி தாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram