தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஆதரவாக ஜேஎன்யு நிர்வாகம் திறந்த வெளியில் நடைபெற்ற உமர் காலித் புத்தக விவாத விழா

11 Aug 2026, 8:39 pm
ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஆதரவாக ஜேஎன்யு நிர்வாகம் திறந்த வெளியில் நடைபெற்ற உமர் காலித் புத்தக விவாத விழா

ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு ஆதரவாக ஜேஎன்யு நிர்வாகம் திறந்த வெளியில் நடைபெற்ற உமர் காலித் புத்தக விவாத விழா

புதுதில்லிநாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தில்லியில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் எஸ்எஸ்எஸ் - 1 அரங்கில் திங்களன்று மாலை முன்னாள் ஜேஎன்யு மாணவரும், விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் இருப்பவருமான உமர் காலித்தின் “Fractured Communities: AdivasiHistories and the Politics of Power” (சிதைக்கப்பட்ட சமூகங்கள்: ஆதிவாசி வரலாறுகளும் அதிகார அரசியலும்) என்ற புத்தகத்தின் விவாத நிகழ்ச்சி நடத்த ஜவஹர்லால் நேருபல்கலைக்கழக மாணவர் சங்கம் (JNUSU) ஏற்பாடு செய்திருந்தது. இந்த புத்தகம் ஜார்க்கண்டின் சிங்பூம்பிராந்தியத்தின் ஆதிவாசி பழங்குடியினரின் வரலாறு குறித்து உமர் காலித் முனைவர் பட்ட ஆய்வின் பிரதியாகும்.

ஆனால் இந்நிகழ்வுக்கு ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென அனுமதி மறுத்தது. ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்குஆதரவாக ஜேஎன்யு நிர்வாகம் செயல்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், உமர் காலித் புத்தகவெளியீட்டு மற்றும் விவாத நிகழ்ச்சி திங்களன்று ஜேஎன்யுவின் சமூக அறிவியல் - 2 கட்டிடத்திற்கு வெளியே, திறந்தவெளியில் நடைபெற்றது. பேராசிரியர்கள்பிரபு மோகபத்ரா, உமா சக்ரவர்த்தி, சுத்தாபிர்தா சென்குப்தா, ஹர்ஷ் மந்தர் மற்றும் பனோஜோத்சனா லாஹிரி என நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.