எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டு இடங்களைக் குறைத்த ஜேஎன்யு நிர்வாகம் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சிபிஎம் எம்.பி. கே.ராதாகிருஷ்ணன் கடிதம்
31 Oct 2026, 8:53 pm
<p><strong>எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டு இடங்களைக் குறைத்த ஜேஎன்யு நிர்வாகம் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சிபிஎம் எம்.பி. கே.ராதாகிருஷ்ணன் கடிதம்</strong></p><p>புதுதில்லிதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) 2026–27ஆம் கல்வியாண்டிற்கான முனைவர் பட்டப் பிரிவு (பிஎச்.டி.) சேர்க்கையில், பட்டியல்சாதியினர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டு இடங்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராக உடனடி தலையீடுக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.ராதாகிருஷ்ணன் ஒன்றிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.</p><p>இதுதொடர்பான கடிதத்தில்,“ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டின்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களில்,பழங்குடியினருக்குத் தேவையான 53 இடங்களில் 38 இடங்களும், பட்டியல் சாதியினருக்குத் தேவையான 107இடங்களில் 103 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான 36 இடங்களில் வெறும் 17 இடங்களும் மட்டுமே ஜேஎன்யு நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பாகுபாட்டுநடவடிக்கைகள், விளிம்புநிலை பின்னணியைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை முறையான வழிகளில் பறிப்பதாகவும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை அப்பட்டமாக மீறுவதாகவும் அமைந்துள்ளன. மேலும், இந்தத் தவறான சேர்க்கைத் தகவல் கையேட்டைத் திரும்பப் பெறவும், இடஒதுக்கீட்டு இடங்களின் பட்டியலைச் சரிசெய்து, அரசியலமைப்புச் சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டைத் தாமதமின்றி முழுமையாக மீண்டும் நடைமுறைப்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சர், ஜேஎன்யு நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கடிதத்தில் சிபிஎம்எம்.பி. கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.</p>
