உமர் காலித் புத்தக வெளியிட்டு விழாவை ரத்து செய்த ஜேஎன்யு
9 Aug 2026, 10:43 pm

உமர் காலித் புத்தக வெளியிட்டு விழாவை ரத்து செய்த ஜேஎன்யு

புதுதில்லிநாட்டின் முக்கிய பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தில்லியில் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் எஸ்எஸ்எஸ் - 1 அரங்கில் திங்களன்று (ஆக. 10) முன்னாள் ஜேஎன்யு மாணவரும், விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் இருப்பவருமான உமர் காலித்தின் “பிராக்சர்டு கம்யூனிட்டீஸ்” (Fractured Communities)என்ற புத்தகத்தின் விவாதம் நடத்த திட்டமிட்டு இருந் தது. பேராசிரியர்கள் பிரபு மோகபத்ரா, உமா சக்ரவர்த்தி, சுத்தாபிர்தா சென்குப்தா, ஹர்ஷ் மந்தர் மற்றும் பனோஜோத்சனா லாஹிரி ஆகியோர் பேச்சாளர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்தனர். இந்நிகழ்வு எஸ்எஸ்எஸ் - 1 அரங்கில் திங்களன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அரங்கின் முன்பதிவை ஜேஎன்யு நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது.இதுதொடர்பாக ஜேஎன்யு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக் கையில்,”நிகழ்ச்சியைப் பற்றிய முழு உண்மைகளையும் வெளிப் படுத்தாத காரணத்தினால் அரங்க முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜேஎன்யு ஒரு ஜனநாயக மற்றும் பரவலாக்கப்பட்ட நிறுவனமாகும். டீன்நிகழ்ச்சியை ரத்து செய்யும் நடவடிக்கையை எடுத்துள்ளார்” என அதில் கூறப்பட்டுள்ளது.

உமர் காலித் புத்தக வெளியிட்டு விழாவை ரத்து செய்த ஜேஎன்யு நிர்வாகத்தின் அடாவடிக்கு கல்வியாளர் கள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பழங்குடிகளின் ஆய்வு புத்தகம்

உமர் காலித் ஜார்க்கண்டின் சிங்பூம் பிராந்தியத்தின் ஆதிவாசி பழங்குடியினரின் வரலாறு குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வை (PhD) முடித்துள்ளார், அதுவே இந்த புத்தகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இந்த ஆய்வு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத் தில் ஜூலை 2018இல் சமர்ப்பிக்கப் பட்டது. அடுத்த ஆண்டே அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப் பட்டது.வரலாற்றாசிரியர் ராமச் சந்திர குஹா,”நான் படித்த இந்தியர்களில் மிகச்சிறந்த முனைவர் பட்ட ஆய்வுகளில் இதுவும் ஒன்று” என்று இதைக் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.