தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாடாளுமன்றத்தில் தலித், பழங்குடி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்க வேண்டும்

27 Sept 2026, 1:01 am
நாடாளுமன்றத்தில் தலித், பழங்குடி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் தலித், பழங்குடி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்க வேண்டும்

மக்களவை சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்த ஒன்றிய அமைச்சர்

புதுதில்லிபாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் தலைவராக இருப்பவர் ஜிதன் ராம் மஞ்சி. இவர் ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சராக உள்ளார். மேலும், பீகார் மாநிலத்தின் தலித் தலைவர்களில் ஒருவர்.இந்நிலையில், ஜிதன் ராம் மஞ்சி,“நாடாளுமன்றத்தில் தலித் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்கப்படவில்லை” எனக் குற்றம்சாட்டி நாடாளுமன்ற மக்களவைத்தலைவர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.செப்டம்பர் 16 அன்று எழுதிய கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாவது,“ஆகஸ்ட் 5 அன்று எனது இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட கர்கோன் தொகுதியின் பாஜக

மக்களவை உறுப்பினரான கஜேந்திர சிங் படேல், நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் மீதான விவாதங்களின்போது தலித் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதைச் சரிசெய்தற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதன்அடிப்படையிலேயே நான் நாடாளுமன்றத்தில் தலித், பழங்குடி உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம்வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.”

இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து கஜேந்திரசிங் படேலிடம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ்தொலைபேசி வாயிலாகக் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,”ஜிதன் ராம் மஞ்சியிடம் தலித் மற்றும் பழங்குடியினச் சமூகங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்குப் பேசுவதற்குப் போதிய நேரம் வழங்கப்படவில்லை எனக் கூறியது உண்மைதான். ஆனால், இது என்னால் மட்டும் வெளிப்படுத்தப்பட்ட கருத்து அல்ல; பல நாடாளுமன்ற உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட உணர்வாகும். சில நேரங்களில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது, சில நேரங்களில் கிடைப்பதில்லை. நிச்சயமாக, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவையில்பேசக் கூடுதல் நேரத்தையே விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.