முதியவரின் வயிற்றில் இருந்த 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்!
28 May 2026, 10:09 pm
<p><strong>முதியவரின் வயிற்றில் இருந்த 15 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்!</strong></p><p>ஜிப்மர் மருத்துவமனை சாதனை புதுச்சேரி, மே 28- புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்து வர்கள், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 73 வயது முதியவரின் வயிற்றில் இருந்த 15 கிலோ எடை யுள்ள அரிய வகை புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்துள்ளனர். வயிற்று வீக்கம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அந்த முதியவரைப் பரிசோதித்தபோது, அவரது இடது சிறுநீரகத்தை முழுமையாகச் சூழ்ந்து பிரம்மாண்டமான கொழுப்புத் திசுப் புற்றுநோய் கட்டி (லிபோசார்கோமா) இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் ராஜ்குமார் நாகராஜன் மற்றும் மயக்க மருந்துத் துறை பேராசிரியர் டாக்டர் சிவசண்முகம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 4 மணி நேரம் போராடி இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையைச் செய்தனர். கட்டியானது சிறுநீரகத்திற்குள் ஊடுருவியிருந்ததால், பாதுகாப்பு கருதி இடது சிறுநீரகமும் கட்டியோடு சேர்த்து அகற்றப்பட்டது. 65 × 45 செ.மீ அளவும், 15 கிலோ எடையும் கொண்ட இக்கட்டி, இந்தியாவில் அகற்றப்பட்ட 3-வது மிகப் பெரிய கட்டியாகும். தற்போது முதிய வரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்து வமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
