தென்னிந்திய திரைப்படங்களுக்கு ரூ. 4,000 கோடி முதலீடு ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம்
10 Dec 2025, 4:08 pm
<p><strong>தென்னிந்திய திரைப்படங்களுக்கு ரூ. 4,000 கோடி முதலீடு ஜியோ ஹாட்ஸ்டார் திட்டம்</strong></p>
<p>சென்னை: ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் 40 திரைப்படங் கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, நாகார்ஜுனா, மோகன்லால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தென்னிந்திய திரைத்துறையின் தலைநகரமாக சென்னை திகழ்வதாக பெருமிதம் தெரி வித்தார். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தமிழ்நாட்டில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும், இதன் மூலம் ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக் கும் என்றும் அவர் தெரிவித்தார். பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழ் திரைத்துறையில் முக்கிய பங்காற்றியதோடு புதிய மாற்றத்திற்கும் வழிவகுத்ததை துணை முதல்வர் சுட்டிக்காட்டினார்.</p>
