தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா!

28 Feb 2026, 2:29 pm
‘ஜி ராம் ஜி’ சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா!
<p><strong>&lsquo;ஜி ராம் ஜி&rsquo; சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்! விவசாயத் தொழிலாளர்கள் தர்ணா!</strong></p> <p>சென்னை, பிப். 28 - அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்கப் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசானது, மகாத்மா &nbsp;காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும்; &lsquo;விபி ஜி ராம் ஜி&rsquo; சட்டத் தைத் திரும்பப் பெற வேண்டும்; வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக் கூலியை 700 ரூபாயாகவும் உயர்த்திட வேண்டும். நிதி ஒதுக்கீட்டை 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமையன்று (பிப்.25) நடைபெற்ற இந்தப் போராட் டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். &nbsp;அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ. லாசர் சிவகங்கையிலும், மாநிலத் தலைவர் மா. சின்னதுரை எம்எல்ஏ திரு வாரூரிலும், பொதுச்செயலாளர் வீ. &nbsp;அமிர்தலிங்கம் தேனியிலும், பொருளா ளர் அ. பழநிசாமி பெரம்பலூரிலும், மாநிலச் செயலாளர் வீ. மாரியப்பன் &nbsp;தஞ்சாவூரிலும், மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். பூங்கோதை விருது நகரிலும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஊரக வேலைக்கான சட்ட அந்தஸ்துடன் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஊரக வேலைச் சட்டத்தை 2025 டிசம்பர் 17 நள்ளிர வில் ஒழித்துக் கட்டிவிட்டு, திடீரென &nbsp;&lsquo;விபி ஜி ராம் ஜி&rsquo; எனும் புதிய வேலை &nbsp;உத்தரவாதமற்ற திட்டத்தை நிறை வேற்றியிருப்பதை ஏற்க முடியாது. அதனை மோடி அரசு திரும்பப் பெறும் &nbsp;வரை போராட்டங்கள் தொடரும் என்று &nbsp;தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.