ஜார்க்கண்டிலும் ‘படிவம்-7’ மூலம் 13,443 வாக்காளர்களை நீக்க திட்டம்
3 Oct 2026, 10:00 pm

ஜார்க்கண்டிலும் ‘படிவம்-7’ மூலம் 13,443 வாக்காளர்களை நீக்க திட்டம்

ராஞ்சிஜேஎம்எம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்(எஸ்.ஐ.ஆர்) பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவைப் போல ஜார்க்கண்டிலும் வாக்குரிமையைப் பறிக்கும் ‘படிவம் 7’ விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அக்டோபர் 1 அன்று வெளியிட்ட தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் பெயர்களை நீக்குவதற்காக 13,443 ‘படிவம் 7’ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதிகபட்சமாக 4,790 விண்ணப்பங்கள் சத்ரா சட்டமன்றத் தொகுதியில் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தின் மொத்த விண்ணப்பங்களில் தோராயமாக 36%ஆகும். அதேபோன்று மேற்கு சிங்பூம் (1,906) மற்றும் தியோகர் (1,099) ஆகிய இரு மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ‘படிவம் 7’ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இறுதிப்பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு ஜார்க்கண்டில் ‘படிவம் 7’ மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கத்தேர்தல்ஆணையம்திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘படிவம் 7’ விண்ணப்பநோட்டீஸ்களை வழங்குவதற்கும்,சரிபார்ப்பை முடிப்பதற்கும், திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கும் கூடுதல் அவகாசம் கோரி ஜார்க்கண்ட் தலைமைத் தேர்தல் அதிகாரி, இந்தியத் தேர்தல்ஆணையத்திற்குக்கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.