தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

10 May 2026, 11:22 pm
வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

வடஇந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

ஜார்கண்ட் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில் தொழிலாளர் கொந்தளிப்பு

நிலுவை ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்கு எதிராகப் பொங்கியெழுந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

வேலைநிறுத்தம் 8

ராம்கர், மே 10 - ஜார்கண்ட் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் ராம்கர் மாவட்டத்தின் பத்ராது (Patratu) பகுதியில், கார்ப்பரேட் நிறுவனங்களின் அராஜகப் போக்கிற்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் தனது போர்க்குணமிக்கப் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் அல்ட்ரா டெக் (UltraTech) சிமெண்ட் ஆலை யில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் பாதுகாப்பற்ற சூழலும், உழைப்பிற்கான ஊதியத்தை மறுக்கும் போக்கும் ஒரு பெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பத்ராது தொழில் பேட்டை யில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில், கடந்த மார்ச் 2026 முழுவதும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் மற்றும் வாயில் மறியல் போராட்டங் களில் ஈடுபட்டனர். பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற ஒரு கோர விபத்து, இந்தப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இரத்தத்தைச் சுவைக்கும் கார்ப்பரேட் இயந்திரங்கள் பிப்ரவரி 21 அன்று ஆலையில் நடை பெற்ற விபத்தில் இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு தொழிலாளி தனது காலை இழக்கும் அளவிற்குப் படுகாயமடைந்தார். உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையோ அல்லது தகுந்த இழப்பீடோ வழங்க நிர்வாகம் மறுத்ததால், தொழிலாளர்கள் ஆலையின் நுழை வாயிலை முற்றுகையிட்டனர். ஆனால், நிர்வாகம் அமைதியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து அச்சுறுத்தியது. இது தொழிலாளர்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்தது.

உழைப்புச் சுரண்டலும் ஊதியத் திருட்டும்

விபத்து ஏற்படுத்திய வடுக்கள் ஆறும் முன்பே, மார்ச் 17 அன்று ‘சுமீத் இன்ஜினியரிங்’ நிறுவனத் தின் கீழ் பணியாற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் ஊதிய நிலுவைக்காக வீதியில் இறங்கினர்.

• மூன்று மாத ஊதிய நிலுவை: கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், அத்தியா வசியப் பொருட்களை வாங்கக் கூட வழியின்றித் தொழிலாளர்கள் தவித்தனர். “கடன் தரக் கடைக்காரர்கள் மறுக்கிறார்கள்” என்று ஒரு தொழிலாளி வேதனையுடன் தெரிவித்தார்.

• 12 மணி நேரக் கட்டாய வேலை: 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், கூடுதல் நேர உழைப்பிற்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டன. மாதம் 30 நாட்களும் எவ்வித விடுப்புமின்றி வேலை செய்யத் தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

• அடிப்படை வசதி மறுப்பு: ஆலைக்குள் தூய்மையான குடிநீர் வசதி கூட இல்லாததால், தொழி லாளர்கள் சுகாதாரமற்ற நீரை அருந்தும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையும் விரிவாக்கமும்

முன்பு பர்ன்பூர் (Burnpur) சிமெண்ட் நிறுவனத்திற்குச் சொந்த மான இந்த ஆலையை 2023-ல் அல்ட்ராடெக் கையகப்படுத்தியது. தற்போது 3.0 எம்டிபிஏ திறனுக்காக ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், பல்லா யிரக்கணக்கான ஒப்பந்தத் தொழி லாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழி லாளர்கள் அங்கு பணியமர்த்தப் பட்டுள்ளனர். நிர்வாகம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க மறுப்பதோடு, பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்திச் சுரண்டு வதாக உள்ளூர் மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

டிஜிட்டல் போராட்டம்

முறையான தொழிற்சங்கத் தலைமைகள் உருவாவதற்கு முன்பே, தொழிலாளர்கள் தங்களின் போராட்டக் காட்சிகளைச் சமூக வலை தளங்களில் காணொலிகளாகப் பரப்பினர். கையில் பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்டு வாயிற்கூட்டங் களை நடத்திய இவர்களின் இந்தப் போராட்டம், ஆலை விரிவாக்கப் பணி களைத் தற்காலிகமாக முடக்கியது.

தீர்வும் தொடரும் சவால்களும்

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கி யிருந்தாலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டனவா என்பது குறித்த விபரங்களை நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஏப்ரல் 17 அன்று புதிய அலகினை நிர்வாகம் தொடங்கி யுள்ளது.

பத்ராது அல்ட்ராடெக் தொழி லாளர்களின் இந்தப் போராட்டம், ஜார்கண்ட் போன்ற கனிம வளம் மிக்க மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்கள் எவ்வாறு நசுக்கப்படு கின்றன என்பதையும், அதற்கு எதிராகத் தொழிலாளர் வர்க்கம் எவ்வாறு தன்னிச்சையாக ஒன்றிணைகிறது என்பதையும் உலகுக்குப் பறைசாற்று கிறது. லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.