ஜார்க்கண்டில் கேஒய்சி குழப்பம் பழங்குடியின முதியவர் மரணம்
18 Jul 2026, 8:49 pm
<p><strong>ஜார்க்கண்டில் கேஒய்சி குழப்பம் பழங்குடியின முதியவர் மரணம்</strong></p><p>ராஞ்சி ஜார்க்கண்ட் மாநி லத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த 75 வயது முதியவர் ஒருவர் கேஒய்சி கட்டாயத்தின் காரண மாக தனது வங்கிக் கணக்கில் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடி யாமல் மரணமடைந்துள்ளார். அவர் உயிரிழந்தது தொடர்பாக அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ரத்தன் லக்ரா என்ற அந்த முதிய வர், தனது முதியோர் உத வித்தொகையை மருத்துவ சிகிச்சைக்காக எடுக்க முடியாமல் போனதற்கு, வங்கிக் கணக்கின் ‘நோ யுவர் கஸ்டமர்’ (KYC) விவ ரங்களைப் புதுப்பிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். பாட்கர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ரத்தன் லக்ரா, காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது சிகிச்சைக்காக டால்டோன்கஞ்ச் சதார் மருத்துவ மனையில் சேர்க்க தனது ஜார்க்கண்ட் கிராமின் வங்கிக் கிளையில் இருந்த 8,000 ரூபாய் உதவித்தொகையை எடுக்க முயன்றார். அவரது குடும் பத்தினரும் பல மாதங்களாக முயற்சி செய்துள்ளனர். ஆனால் வங்கி அதிகாரி கள் மீண்டும் மீண்டும் கேஒய்சி நடைமுறைகளை முடிக்க வேண் டும் என சொல்லி அவர்களை அலைக்கழித்துள்ளனர். இந்நிலை யில் முதியவர் ஜூலை 6 அன்று மரணமடைந்தார். அவரது உடலை வங்கி கிளையின் வெளியே வைத்து குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர். வங்கிக்கு பலமுறை சென்றும், கேஒய்சி செயல்முறை யை முடிப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை வழங்காமல், வங்கி அதிகாரிகள் தங்களை வெவ்வேறு நபர்களிடம் அனுப்பி யதாகவும், வங்கி ஊழியர்கள் தங்களிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்ட தாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து, முதல மைச்சர் ஹேமந்த் சோரன் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.</p>
