தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி ரஞ்சி

10 Aug 2026, 9:07 pm
ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி ரஞ்சி

ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி ரஞ்சி

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுமுறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலப் பணியாளர் தேர்வாணையத்தின் (JPSC) ஒருங்கி ணைந்த குடிமைப் பணித் தேர்வு மற்றும்ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (JSSC-CGL) தேர்வு என அழைக்கப்படும் ஜார்க்கண்ட் பொது பட்டதாரிநிலை ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு போன்றஅரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் நடந்தமுறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இது குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) விசாரணை நடத்தக் கோரியும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜூலை 25 முதல் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. தங்களது கோரிக்கை கள் குறித்து அரசு உறுதியான முடிவை எடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த முறைகேடுகள் குறித்து ஜார்க்கண்ட் குற்றப் புலனாய்வுத் துறை (CID) விசாரணை நடத்தி வருகிறது. இந்த போராட்டம் தொடர்பான அரசு - இளைஞர் தரப்புக்கு இடையேயான 6 ஆவது கட்ட பேச்சுவார்த்தைஞாயிறன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “வேலைவாய்ப்புத் தேர்வுமுறைகேடுகளைக் கண்டித்துப் போராடும் இளைஞர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் நீதி வழங்கப்படும். இளைஞர்களின் கவலைகளே தனது கவலை. அதனால் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.பேச்சுவார்த்தை மட்டுமே அனைத்துப் பிரச்சனை களுக்கும் தீர்வாகுமே தவிர, தடிகள், கம்புகள், துப்பாக்கிகள் அல்ல. அதனால் போராட்டத்திற்கு அரசியல் ஆதரவைத் தேட வேண்டாம். நீதி உங்கள் உரிமை,அதை வழங்குவதற்கு அரசு உறுதுணையாக உள்ளது” என்று பேசினார்.

இதுவரை இந்த முறைகேடு தொடர்பாக 19 பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது. மூன்றுஉறுப்பினர்களைக் கொண்ட ஜேபிஎஸ்சி வாரியமும் ராஜினாமா செய்துள்ளது. இந்நிலையில் தான் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேவேந்திர நாத் மஹதோ தலைமையில் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தைநோக்கிப் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அவர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்றபோது தண்ணீர் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியும், தடியடிகளும் காவல்துறை ஏவியது.

கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனமான டிஆர்எஸ் டேட்டா பிராஸசிங் பிரைவேட் லிமிடெட் முகமையைப் பயன்படுத்திய வழக்கில், முன்னாள்ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எல். கியாங்தேவை மாநில குற்றப் புலனாய்வுத் துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளது.தேர்வுகள் உயர்நீதிமன்றம் மற்றும் இந்திய உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டதால், அதை ரத்து செய்யவோ அல்லது வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று மாநில அரசு கூறியுள்ளது.

அதற்குப் பதிலாக, மாணவர்கள் எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஓய்வுபெற்றநீதிபதிதலைமையிலான நீதித்துறை கண்காணிப்புக் குழுவை சோரன் அரசு பரிந்துரைத்துள்ளது. தேர்வு முறையை மேம்படுத்து வதற்காக நிபுணர் குழுக்கள், விரைவுநீதிமன்றங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அரசு அறிவித்துள் ளது, ஆனால் இவற்றை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.