தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுச் சொத்து, தனியார் கொள்ளை: ஜார்க்கண்ட் பச்வாரா நில உரிமைப் போராட்டம் - பிரதிக் மிஷ்ரா

6 May 2026, 8:58 pm
பொதுச் சொத்து, தனியார் கொள்ளை:  ஜார்க்கண்ட் பச்வாரா நில உரிமைப் போராட்டம் - பிரதிக் மிஷ்ரா

பொதுச் சொத்து, தனியார் கொள்ளை: ஜார்க்கண்ட் பச்வாரா நில உரிமைப் போராட்டம் - பிரதிக் மிஷ்ரா

ஜார்க்கண்டின் சந்தால் பர்கானா வனப்பகுதிகளில் ஒரு பெரும் வன் முறையான உருமாற்றம் நிகழ்ந்து வருகின்றது. இப்பகுதியின் மலைகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் அடியில் கிழக்கு இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிலக்கரி இருப்புக்கள் உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில், பச்வாரா நிலக்கரி மண்ட லத்தில் உள்ள பச்வாரா வடக்கு, பச்வாரா மத்தி, பச்வாரா தெற்கு ஆகிய மூன்று தொகுதிகள் அகழ்வாராய்ச்சிக்காகத் திறக்கப்பட்டுள்ளன. இது பொதுச் செல்வம் தனியார் லாபத்திற்காக கை மாற்றப்படுவதையும் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடும் பழங்குடி மக்களின் துயரத்தையும் சொல்லும் கதையாகும்.

மேலோட்டமாகப் பார்த்தால், மேற்கு வங்கம், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்காக இந்தச் சுரங்கங்கள் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப் பட்டன. ஆனால் உண்மையில், ‘சுரங்க மேம்பாட்டா ளர்கள் மற்றும் இயக்குநர்கள்’ (MDOs) என்ற பெயரில் செயல்படும் தனியார் உள்கட்டமைப்பு நிறுவ னங்களே இந்த நிலக்கரியை வெட்டி எடுக்கின்றன. இதன் விளைவாக, பொது நிலக்கரி இருப்புக்கள் தனியார் சொத்துக்களை நிரப்புகின்றன; ஆனால் அதன் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை சந்தால் மற்றும் பஹாரியா பழங்குடியினரே சுமக் கின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஆதிவாசி அதிகார் மஞ்ச் குழுவினர் இப்பகு தியில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் உரி மைகளுக்காகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

பெரும் இயற்கை வளக் கொள்ளை

பச்வாரா நிலக்கரி மண்டலத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 100 கோடி டன்னுக்கும் அதிகமான நிலக்கரி இருப்பு உள்ளது. 2014-இல் உச்சநீதிமன்றம் 200-க்கும் மேற்பட்ட நிலக்கரித் தொகுப்புகளை ரத்து செய்த பிறகு, 2015-ஆம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கச் சட்டத்தின் கீழ் இவை மீண்டும் மாநில மின் வாரியங்களுக்கு ஒதுக்கப் பட்டன. பச்வாரா வடக்கு மேற்கு வங்கத்திற்கும் (WBPDCL), பச்வாரா மத்தி பஞ்சாபிற்கும் (PSPCL), பச்வாரா தெற்கு உத்தரப் பிரதேசத்திற்கும் (NUPPL) ஒதுக்கப்பட்டன.

பெயரளவுக்கு அரசு உரிமையாளராக இருந்தா லும், செயல்பாட்டு முறை வேறொரு கதையைச் சொல்கிறது. எந்த அரசு நிறுவனமும் நிலக்கரியை நேரடியாக வெட்டியெடுப்பதில்லை. மாறாக, நிலக்கரி சுரங்க ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்களி டம் ஒப்படைத்துள்ளன. பச்வாரா வடக்கை ஹைதரா பாத்தைச் சேர்ந்த என்சிசி-பிஜிஆர் (NCC-BGR) நிறு வனமும், பச்வாரா மத்தியை திலீப் பில்ட்கான் (Dilip Buildcon) மற்றும் விபிஆர் (VPR) சுரங்க நிறுவன மும் இயக்குகின்றன. பச்வாரா தெற்கு நிலக்கரித் தொகுதி அகமதாபாத்தைச் சேர்ந்த எம்ஐபிஎல் (MIPL) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த ‘சுரங்க மேம்பாடு மற்றும் இயக்குதல் ஒப்பந்தம்’ முறை யில், அனைத்து லாபமும் தனியாருக்குச் செல்கிறது; ஆனால் இடர்கள் அனைத்தும் உள்ளூர் மக்க ளுக்கே சேர்கின்றன.

இலக்கில் இருக்கும் கிராமங்கள்

இந்தச் சுரங்க விரிவாக்கத்திற்காக ஜார்க்கண்டின் பாகூர் மற்றும் தும்கா மாவட்டங்களில் ஆயிரக்க ணக்கான ஏக்கர் பழங்குடியின மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நிலம் கையகப் படுத்துவதற்கு முன்பாக முறையான ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், அவை கிராம சபைகளுடன் கலந்தா லோசிக்காமல் ரகசியமாகச் செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். சந்தால் பர்கானா குத்தகைச் சட்டம் (1949)-இன் கீழ் பழங்குடி நிலங்களை பழங்குடி அல்லாதவர்களுக்கு மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பெசா (PESA) சட்டம் மற்றும் வன உரிமைச் சட்டம் (2006) ஆகியவை கிராம சபையின் அனுமதியைக் கட்டாயமாக்குகின்றன. ஆனால், இவை அனைத்தும் இங்கே அப்பட்டமாக மீறப்படுகின்றன.

முறிக்கப்பட்ட மறுவாழ்வு வாக்குறுதிகள்

பச்வாரா மத்தியத் தொகுதியில் முன்பு சுரங்கம் நடத்திய ‘பானெம் நிலக்கரி’ (Panem Coal) நிறு வனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒன்பது மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. புதிய நிறுவனமான பஞ்சாப் மாநில மின்சாரக் கழகம் (PSPCL), பழைய தொழிலாளர்களைத் தங்களுக்குக் கீழ் அமர்த்திக் கொள்ள எந்த உத்தரவாதமும் அளிக்க வில்லை. “பச்வாரா மத்தியச் சுரங்கம் மூலம் 115 லட்சம் டன் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு, அரசுக்கு 950 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது” என பஞ்சாப் அரசு பெருமை பேசுகிறது. ஆனால், அந்த லாபக் கணக்கில் எத்தனை பழங்குடி இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.

தற்போது அமைக்கப்பட்டுள்ள ‘புதிய கதல்திஹ்’ (New Kathaldih) போன்ற மறுவாழ்வு குடியிருப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் ஏற்கெனவே இடிந்து விழும் நிலையில் உள்ளன. தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய மனைகளுக்கான நிரந்தரப் பட்டாவை ஏற்க மக்கள் மறுக்கின்றனர்; ஏனெனில் சுரங்கம் முடிந்த பிறகு தங்கள் பழைய நிலத்திற்கே திரும்பலாம் என்ற சிறு நம்பிக்கை அவர்களிடம் இன்னும் இருக்கிறது. ஆனால், வெட்டியெடுக்கப்படும் மண் மலைபோலக் குவிக்கப்படுவதால், அந்த நிலத்தை மீண்டும் விவசாயத்திற்குப் பயன்படுத்துவது சாத்தியமற்றதாக மாற்றப்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழல் மாசு தீவிரம்

திறந்தவெளிச் சுரங்கங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதோடு, காற்றில் பெரும் தூசியைக் கலக்கின் றன. வெடி வைப்பதாலும், நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளாலும் ஏற்படும் மாசு, விளைநிலங்களையும் நீர்நிலைகளையும் பாழாக்குகின்றன. லாரிகளில் இருந்து சிதறும் நிலக்கரித் தூசியால் பயிர் விளைச்சல் குறைந்துவிட்டதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் மற்றும் தோல் நோய்கள் ஏற்படு கின்றன. இது குறித்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தாலும், எந்த நட வடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

போராட்டமும் கோரிக்கைகளும்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பிற அமைப்புகள் இந்தப் பாதிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அவர்களின் முக்கிய கோரிக்கைகள் வருமாறு:

Mபானெம் சுரங்கம் செயல்பட்ட காலத்தில் இடம் பெயர்ந்தவர்கள் உட்பட அனைவருக்கும் முழுமையான மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

Mபாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல், நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும்.

Mவன உரிமைச் சட்டத்தின் கீழ் பஹாரியா மற்றும் பிற வனவாழ் மக்களுக்கு நிலப் பட்டா வழங்கப்பட வேண்டும்.

Mசுரங்கம் தோண்டப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவாறு சீரமைக்க வேண்டும். Mபெசா (PESA) சட்டத்தின்படி கிராம சபையின் அனுமதியின்றி நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

பச்வாராவுக்கான போராட்டம் என்பது வெறும் நிலக்கரிக்கான போராட்டம் அல்ல; அது சந்தால் பர்கா னாவின் எதிர்காலத்திற்கான போராட்டம். ஆதிவாசி களின் நிலம், வாழ்வாதாரம் மற்றும் கண்ணி யத்திற்கான போராட்டம் இது. சுரங்க இயந்திரங்களின் இரைச்சலுக்கு மத்தியில், பூமி முழுமையாகக் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பாக அந்த மக்களின் குரல் அதிகார வர்க்கத்தின் காதுகளில் விழுமா என்பதுதான் இன்றைய கேள்வி.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி, ஏப்ரல் 12, 2026

தமிழில் சுருக்கம் : ராகினி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.